ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை சிந்து மேனன். லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
நடிகை சிந்து மேனன் ஈரம் படத்துக்கு முன்னர் பல படங்களில் நடித்து பிரபலமடைந்திருந்தாலும், ஒரு கதாபாத்திரம் அனைவராலும் கொண்டாடப்பட்டது என்றால் அது ‘ஈரம்’ படத்தில் வரும் ரம்யா கதாபாத்திரம் தான்.
அந்த படத்தில் இவங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். பலர் இவரின் புகைப்படங்களை தான் போன் வால்பேப்பர் ஆக எல்லாம் வைத்திருந்தனர்.
பெரிய ஹிட் கொடுத்தவுடன் அவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்த நிலையில் திடீரென்று 2010ம் ஆண்டே டொமினிக் பிரபு என்ற லண்டனை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின்னரும் சில படங்கள் நடித்தார்.
ஆனால் திருமணம் முடிந்து சில ஆண்டுகளிலேயே கூடுவதுடன் லண்டன் சென்று செட்டில் ஆனார். இப்போது குடும்பத்தை பார்த்து கொள்கிறார். அந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். சமீபத்தில் தான் மூன்றாவது குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.