அம்மாடியோவ் கீர்த்தி சுரேஷ் போலீசா? ஜெயம் ரவி மிரட்டல் தாறு மாறு.. சைரன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இப்போவே நடிகர் ஜெயம் ரவி படங்கள் என்றால் கொஞ்சம் மினிமம் கேரண்ட்டி படங்கள். எப்படியும் படம் ரொம்ப நல்லாவே இல்லையென்றால் கூட ரொம்ப மொக்கையா இருக்காதது என்ற நம்பிக்கையில் போகலாம். இவர் நடிப்பில் ரொம்ப சுமாரான விமர்சனங்கள் பெற்ற படம் என்றால் இறைவன் தான். இப்போ மீண்டும் ஒரு செம்ம கன்டென்ட் ஓட வந்துட்டாரு.
ஒரு நல்ல ஹீரோக்கு இது தான் அழகு. எல்லாருமே எல்லா தடவையும் ஒரு நல்ல கதை தேர்ந்தெடுத்து நடித்துவிட முடியாது. எப்படியோ ஏதோவொன்று நடந்துவிடும். அப்படி மறக்கவேண்டிய கசப்பான உண்மை தான் அவரோட இறைவன் படம். இப்போ சைரன் படத்துக்கு வருவோம், டீசர் நேற்று ரிலீஸ் ஆச்சு, எல்லாமே ரொம்ப தரமா இருக்கு.
இதில் ரொம்ப ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் கீர்த்தியை போலீசா காட்டின் தான். ஒரு சில கதாபாத்திரம் எல்லாம் செட்டே ஆவாது இவங்களுக்கு குழந்தை முகம் என்று நினைத்திருப்போம். ஆனால் இந்த இயக்குனர் கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சிருக்கார். ரொம்ப சூப்பரா இருக்காங்க, action காட்சிகள் கூட இருக்கும் என்று நம்புகிறோம்.
படத்தின் BGM அதுதான் ஒவ்வொரு காட்சியையும் தூக்கி நிறுத்தும், இந்த படத்தின் அது இன்னும் ரொம்ப சூப்பராவே வேலை செஞ்சிருக்கு. இசை அசுரன் என்ற டேக் சரியாதான் கொடுத்திருக்காங்க ஜிவிக்கு மிரட்டலா இருக்கு இசை. காட்சியமைப்பு சஸ்பென்ஸ் எல்லாம் ரொம்ப சூப்பராக இருக்கும் என்று நம்புகிறோம், நீங்க இப்போ டீசர் பாருங்க.
வீடியோ: