எல்லாருக்கும் பிடிச்ச ஹீரோ இவங்க தானாம். அஜித் இல்லையாம். வலிமை படத்தின் விநியோகஸ்தர் வீடியோ வைரல்.
வரும் தீபாவளியன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிரின்ஸ்’ படம் வெளியாகிறது. இந்த படம் தான் தீபாவளியன்று ரிலீஸ் ஆகும் முதல் சிவாவின் படம். கண்டிப்பா இந்த படத்தை அவர் வாழ்க்கையில் மறக்கமாட்டார். பெஸ்டிவல் ரிலீஸ் எல்லாம் ஒரு நடிகனுக்கு கிடைத்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா மொமெண்ட்” தான். கார்த்தியின் சர்தார் படமும் ரிலீஸ் ஆகிறது. ரெண்டுமே இரண்டு வகையான படம், ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் காத்திருக்கு.
சிவா அவருடைய usual டெம்ப்ளட் தான் இந்த படத்திலும் பாலோ பண்றாரு. அது தான் என்டேர்டைன்மெண்ட், காமெடி. அதுல தான் அவரு செம்ம ஸ்ட்ராங்கு. படத்தில் கதையே இல்லனா கூட அவர் ஜாலியா வந்து ரெண்டு கவுன்டர் போட்டு படத்தை ஹிட் ஆகிட்டு போயிட்டே இருப்பாரு. இந்த படத்தின் இயக்குனருக்கு ப்ளஸ் காமெடிய தான். அவர் தெலுங்கில் இயக்கிய இரண்டு படமும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு. அதனால் இந்த படம் தெலுங்கில் செம்மயா ஓபன் பண்ண வேற காத்திருக்கு.
தற்போது படத்தின் ப்ரோமோஷன்ஸ் எல்லாம் வேற லெவெலில் போயிட்டு இருக்கு. இந்த படத்துக்கு கிட்டத்தட்ட 650 திரையரங்குகள் தமிழ்நாடு முழுவதும் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விநியோகஸ்தர்கள் சிவாவின் வளர்ச்சியை கண்டு மிரண்டு பொய் உள்ளனர். கண்டிப்பாக இவரோட படம் பந்தயம் அடிக்கும் என்று நம்பி இவ்வளவு திரையரங்கில் வெளியிடுகின்றனர். மேலும் ஏற்கனவே ரஜினி, விஜய் வழியில் வந்துவிட்டார்.
இல்லறத்துக்கும் பிடிச்ச ஹீரோ என்று வலிமை விநியோகஸ்தர் அன்புச்செழியன் பேசும் பொது MGR,ரஜினி, விஜய் அடுத்து சிவா என்று குறிப்பிட்டுள்ளார்.அதனால் அஜித் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். என்னடா அஜித் பெயரை மட்டும் விட்டுட்டார் என்று. ஆனால் அன்புச்செழியன் குறிப்பிட்ட நடிகர்களுக்கு மட்டும் தான் ஆறிலிருந்து அறுபது வரையில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Video:
Family, Kids & General Audience Favorites 💯 - BOX OFFICE RULERS of Tamil Cinema 🔥
— VCD (@VCDtweets) October 17, 2022
• #MGR 💥
• #Rajinikanth 💥
• #ThalapathyVijay 💥
• #Sivakarthikeyan 💥#Prince #PrinceDiwali #VarisuFirstSingle #Varisu #Thalapathy67 #VarisuPongal #Jailer pic.twitter.com/dOwtxcMBWn