ஆமா நான் தோத்துட்டேன் என்று சொல்றதுக்கே ஒரு தில்லு வேணும். வீரன் சிவகார்த்திகேயன் வீடியோ வைரல்.

Siva seemaraja failure analysis

தோல்வியை ஒத்துக்கொள்பவன் வீரன், ஒத்துக்கொண்டு திருத்திக் கொள்பவன் விவேகன், ஒத்துக்கொண்டு, திருத்தி, கடந்து செல்பவன் ஞானி. இதுவே வாழ்க்கை. வாழ்க்கையில் தோல்வி மட்டுமே இருந்துவிடாது, அதற்கு சிறந்த உதாரணமே சிவகார்த்திகேயன் தான். சமீபத்தில் அவர் பரத்வாஜ் ரங்கனுடன் நடந்த நேர்காணலில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் ஒன்று சீமராஜா படத்தின் தோல்வியை பற்றியும் பேசியுள்ளார்.

2018ம் ஆண்டு பல எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரிலீசான பெரிய படம் தான் சீமராஜ. எப்படி விஜய், அஜித், ரஜினி படங்களுக்கு ஓப்பனிங் இருக்குமோ, அந்த அளவுக்கு இந்த படத்திற்கும் ஒபெநிங் இருந்துது. ஏற்கனவே இரண்டு பெரிய ஹிட் படங்களை கொடுத்ததால் இந்த கூட்டணி மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் சிவாவோட சினிமா வாழ்க்கையில் இவ்வளவு எதிர்பார்ப்பது வந்து தோல்வி அடைந்த மிகப்பெரிய படம் அது.

அப்போது வந்த விமர்சனங்கள் கடுமையாக பாதித்தது. அதனால் அடுத்தடுத்து நடிக்கும் படங்களில், அவர் மிகவும் கவனம் செலுத்தி தான் செலக்ட் செய்து வருகிறார். அதனால் அடர்க்குப்பின்னர் அவருக்கு தோல்வியே இல்லை இன்று வரை. ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை என்று அவரே ஒத்துக்கிட்டார். ஆனால் அந்த படம் வசூலில் போட்ட காசை எல்லாம் எடுத்துவிட்டது. அதனால் பெரிய தோல்வி இல்லை வணீக ரீதியில்.

ஆனாலும் சிவா அந்த படம் ஏன் தோல்வி அடைந்தது ஏன் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று ஒருபெரிய ஆராய்ச்சியே செய்துள்ளார். இந்த வீடியோவில் அதை விளக்கியும் உள்ளார்.

Video:

Related Posts

View all