பாரின் பொண்ணு, சிவகார்த்திகேயன் செம்ம ரொமான்ஸ் மூட் அவங்க கூட. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
சிவகார்த்திகேயன் அடுத்து வாய்த்த பேகப்பெரிய படி இந்த ‘பிரின்ஸ்’ படம். எப்படின்னு கேட்டா தெலுங்கில் சூப்பர்ஹிட் படம் கொடுத்த இயக்குனர் அனுதீப், அவர் தான் இந்த படத்தோட இயக்குனர். கடந்த காலத்திலும் இது போன்று நமது ஹீரோக்கள் மற்ற மொழி இயக்குனருடன் சேர்ந்து வேலை செய்திருக்கிறார்கள், ஆனால் அந்த இயக்குனர்களுக்கு தமிழ்/தெலுங்கு அல்லது தமிழ்/மலையாளம் என்ற லேபிள் இருக்கும். இப்போது அதுபோன்று இல்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷும் அவர்களுடைய அடுத்த படம் தெலுங்கு இயக்குனர்களுடன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள்கான அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது. செப்டம்பர் மாதத்தை பிரின்ஸ் முதல் பாடலுடன் கொண்டாடுவோம்.
பாரின் ஹெராயின் மரியாவுடன் செம்ம ரொமான்டிக் மூடில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவங்களும் செம்ம அழகு. உக்ரைன் நாட்டை சேர்ந்த கதாநாயகி. நல்ல கெமிஸ்ட்ரி தான் இரண்டு பேருக்கும்.
ரீசன்ட் சென்சேஷன் தமன் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர். அவரோட career பீக்ல இருக்காரு.