நடிகன்யா நடிகன்.. ரிலீஸ் ஆனது எஸ்.ஜெ.சூர்யாவோட மார்க் ஆண்டனி காங்ஸ்டர் லுக்.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Sj suryah look mark antony

விஷால், எஸ்.ஜெ.சூர்யா சூர்யா இணைந்து நடிக்கும் படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தை AAA, திரிஷா இல்லனா நயன்தாரா படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ்குமார். இன்று ஆயுத பூஜை நல்ல நாளில் படத்தின் வில்லனான எஸ்.ஜெ.சூர்யாவின் லுக்கை ரிலீஸ் செய்து படத்தின் எதிர்பார்ப்பை வானளவு உயரவைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் விஷால் அவரோட பிறந்தநாளை கொண்டாடினார், அப்போது படக்குழுவினர் விஷாலின் லுக்கை ரிலீஸ் செய்தனர். அப்போது விஷால் ஓட்டு தாடியுடன் இருந்தார். அதனால் அந்த லுக் கேலி, கிண்டலுக்கு ஆளானது. ஆனால் படத்தில் கூட ஒரு சில கட்சிக்கு மட்டும் தான் ஒட்டு தாடி போல. எஸ்.ஜெ.சூர்யா தற்போது நடிக்கும் படங்களில் இந்த படத்தில் மட்டும் தான் வில்லன் என்று சொல்லப்படுகிறது, இதை அவரும் உறுதி செய்துள்ளார்.

ஏனென்றால் ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்திலும், தளபதி விஜயின் வாரிசு படத்திலும் முக்கியமான கதாபாத்திரம். அதில் இவர் வில்லனா இல்லை குணசித்திர கதாபாத்திரமா என்று தெரியவில்லை. படக்குழு அதை மிகவும் சஸ்பென்ஸாக வைத்துள்ளது. இந்த படம் ஒரு period படம். 80ஸ் அல்லது அதற்குமுன்னர் வாழ்ந்த காங்ஸ்டர்ஸ் பற்றிய கதை.

ஆதிக் சிம்புவை வைத்து இயக்கிய AAA படம் படுதோல்வி அடித்ததால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை. அது படத்துக்கு நல்லது தான். ஏனென்றால் இந்த படத்தின் word ஆப் மவுத் நல்லா இருக்கும் பட்சத்தில் படத்தின் வெற்றி மக்களால் உறுதி செய்யப்படும், பாக்ஸ் ஆபிசில் வசூல் அள்ளும். அதனால் படக்குழுவினரும் கொஞ்சம் அடக்கி வசிப்பது சிறந்தது. மற்றதெல்லாம் அதுபோல நடந்துவிடும் என்பதை ஐயம்.

Poster:

Sj suryah look mark antony

Related Posts

View all