நாடி நரம்பெல்லாம் சிலுத்துருச்சு மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு.. என்ன மிரட்டல் இசை.. வீடியோ வைரல்.
கண்டிப்பா நீங்க சலார் படத்தை பார்த்திருப்பீங்க அல்லது இந்த இசையை கடைசி ஒரு மாதத்தில் எங்கயாச்சும் கேட்டிருப்பீங்க. அப்படியொரு மிரட்டலான இசை, பிரபாஸ் கத்தி எடுக்கும் பொது, அந்த இன்டெர்வல் பிளாக் எல்லாம் தெறிக்கவிட்டிருப்பாங்க. ரவி பஸ்ரூர் மாதிரி ஒரு இசைமைப்பாளரை கண்டிப்பா தமிழ் சினிமா யூஸ் பண்ண வேண்டும்.
முதல் நாள் படம் பார்த்தவங்க சொன்னது எல்லாம் ரொம்ப காதுக்கு இரச்சியா இருக்குது என்று ஆனால் அமைதியான திரையரங்கில் பார்த்தவங்க அனைவருக்குமே அதுவொரு விசுவல் ட்ரீட் தான். அடுத்து என்ன நடக்கபோகுது, அந்த சம்பவம் நடக்கும்பொழுது ஒரு டென்ஷன் மைண்டைன் பண்ணி ஒரு பில்ட் அப் கொடுத்திருப்பாங்க பாருங்க. மிரட்டல்.
உக்ரம் படமாக இருக்கட்டும், KGF படமாக இருக்கட்டும், சலார் பாடமாக இருக்கட்டும் கதை, எமோஷன், ட்ராமை விட அதிகமா மனதில் இருப்பது அந்த இசை தான். எங்கேயோ வேலை செய்துகொண்டிருந்த மனிதரை கூட்டு வந்து உனக்கு இசை தான் சரியா இருக்கும் என்று நம்பிக்கையூட்டிய இயக்குனர், தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்.