ஸ்ரீதிவ்யாவை தமிழில் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு.. ஆரம்பம் ஆகிறது வெர்சன் 2.0. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
தெலுங்கு, மலையாள, கன்னட சினிமாவில் ஒரு சில நல்ல படங்கள் வந்தால் அதை தமிழில் ஒரு சிலர் ரீமேக் செய்வர். அப்படி இந்த முறை ரீமேக் செய்தது விக்ரம் பிரபு. கனடா மொழியில் வெளிவந்த தகரு படத்தை தான் ரீமேக் செய்துள்ளார். இந்த படத்தில் நீண்ட நாள் கழித்து கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் தமிழ் பெயர் ரைடு.
இந்த படத்தின் கதை ரொம்ப சிம்பிளான கதை தான். ஒரு போலீஸ் அதிகாரிக்கு ஒரு கேஸை handle பண்ண ஆர்டர் வருது, அதை அவர் செய்து முடித்தார் இல்லையா என்பது தான். மேலாக பார்ப்பதற்கு ஒரு சுமாரான கதையாக இருக்கலாம், ஆனால் திரைக்கதையில் புகுந்து விளையாடிருப்பாரு இயக்குனர். ட்விஸ்ட் டர்ன்ஸ் எல்லாம் படத்தில் வேற ரகமாக இருக்கும்.
ரொம்ப நாள் கழித்து ஸ்ரீ திவ்யா திரையில் தோன்றுவதால் ஸ்ரீ திவ்யா ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது. ஏனென்றால் இவங்க ரொம்ப நாளைக்கு முன்னாடி தமிழ் சினிமாவை ஆட்சி செய்த ஹீரோயின். அடுத்தடுத்து படங்கள் எல்லாம் நடிச்சு ஒரு முன்னணி கதாநாயகியா குறுகிய காலத்தில் மேல வந்தவங்க. அதே மாதிரி downfal-ம் வந்திடுச்சு.
விக்ரம் பிரபு முழு நீல ஹீரோவா இரண்டு படம் ரிலீசுக்கு காத்திருக்கு. ஒன்னு பாயும் ஒளி நீ எனக்கு, அடுத்து இந்த ரைடு படம். இந்த ரைடு படம் தான் பர்ஸ்ட் ரிலீஸ் ஆகும் என்று நினைக்கிறோம். அதற்கெல்லாம் முன்னர் இவருடைய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம் ரிலீஸ் ஆகிவிடும் என்று நினைக்கிறோம். இந்த வருடத்தில் மட்டும் விக்கிரம் பிரபுக்கு மூன்று ரிலீஸ் காத்திருக்கு.