திருப்பதி ஏழுமலையானை மகளுடன் தரிசித்த ஷாருக்கான்.. ஓஹோ நயன்தாராவும்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
திருப்பதி ஏழுமலையானை தனது மகள் சுஹானா கான் & நடிகை நயன்தாராடன், நடிகர் ஷாருக்கான் சுவாமி தரிசனம் செய்தார். வரும் வியாழக்கிழமை ஜவான் படம் வெளியாக உள்ள நிலையில் அதில் நாயகன் & நாயகியாக நடித்துள்ள ஷாருக் மற்றும் நயன்தாரா திருப்பதி வந்திருந்தனர்.
திருப்பதி திருமலை கோவில் அனைத்திற்கும் ஓர் முன்னுதாரணம் மதம் ஒரு நம்பிக்கையே, மனிதர்கள் அனைவரும் ஒன்றே என்ற அடிப்படையில் மற்ற மதத்தை சார்ந்தவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்ற கோட்பாட்டை முன்னெடுத்து இருக்கிறது என்ற கருத்தை கண்டிப்பா நாம் வரவேற்று தான் ஆக வேண்டும்.
இன்னொரு 1000 கோடி வசூல் படமாக ஜவான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஷாருக்கானின் மேஜிக்கே இதற்குக் காரணம் என்று சொல்லும் “ஜவான்” படத்துக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே 7 லட்சத்துக்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளன. #2DaysToJawan
அதிரடி களியாட்டம் காண தயாரா? 🤩 ஜவான் திரைக்கு வர இன்னும் 48 மணிநேரம் உள்ளது. அட்வான்ஸ் புக்கிங் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வருமானம் என்று வரும்போது, ஷாருக்கிற்கு இணையாக யாராலும் முடியாது. ஜவான் ஏற்கனவே முன்பதிவில் 20 கோடிகளை குவித்துள்ளது. பதான் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட எட்டு மாத இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கானின் வெற்றிகரமான வெள்ளித்திரைக்கு திரும்புவதை ஜவான் குறிக்கிறது.
Video:
#ShahRukhKhan offers prayers at sacred #Tirupati temple this morning along with daughter #Suhana & #Jawan co star #Nayanthara.
— News7Telugu (@news7telugu) September 5, 2023
Watch the video inside! pic.twitter.com/08YHNwUwmQ