ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு செம்ம குத்தாட்டமிட்டு ரீல்ஸ் செய்திருக்கும் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்.
ஸ்ருதி ராஜ் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகை ஆவார். இவர் 1995ஆம் ஆண்டு முதல் மாண்புமிகு மாணவன், இனி எல்லாம் சுகமே, காதல்.காம், ஜெர்ரி போன்ற திரைப்படங்களிலும் மற்றும் தென்றல், ஆபீஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஆனார்.
இவர் 1995ஆம் ஆண்டு வெளியான அக்ராஜன் என்ற மலையாளத் திரைப்படத்தில் ஜான்சி என்ற துணைக்கதாபாத்திரம் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார்.
இதை தொடர்ந்து 1996ஆம் ஆண்டு தமிழ் நடிகர் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இது இவரின் முதல் தமிழ் மொழித் திரைப்படமாகும்.
1998ஆம் ஆண்டு நடிகர் அப்பாஸ் மற்றும் சங்கவி நடித்த இனி எல்லாம் சுகமே என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நிர்மலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதே ஆண்டில் அந்தமான் என்ற கன்னடமொழித் திரைப்படத்தில் சிவ ராஜ்குமாருக்கு ஜோடியாக மோனிஷா என்ற கதாபாத்திரத்தின் மூலம் கன்னடத்திரைப்படத் துறையில் அறிமுகமானார். முன்னாள் மலையாளத்து திரைப்பட நகைச்சுவை நடிகையான ஸ்ரீலதா மூலம் இயக்குனர் ஜி.ஜோர்ஜ் இயக்கிய மம்மூட்டி மற்றும் குஷ்பூ இணைத்து நடித்த எலவம்கோடு தேசம் என்ற மலையாளத் திரைப்படத்தில் ஒரு இளம் பெண்ணான நந்தினி என்ற கதாபத்திரத்தில் நடித்தார்.
அதன் பிறகு பெரிதாக திரை வாய்ப்புகள் எதும் வராததால் தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான இவர் கதாநாயகியாக நடித்த தென்றல் என்ற மெகாத்தொடர் டி.ஆர். பி யில் டாப்பில் இருந்ததோடல்லாமல் இவருக்கு ஒரு அடையாளத்தை பெற்றுத் தந்தது. அதன் பிறகு தொடர்ந்து பல தொடர்களில் நடித்தார். விஜய் டிவியின் ஆபிஸ் தொடரும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.