சட்டையை பிடிச்சு இழுத்து அடுத்து என்ன பண்ண போறீங்க.. ஹாட் ரித்திகா, அதிதி.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நடிகர் சாந்தனு ரொம்ப நாளா ஒரு பிரேக் தனக்கு தமிழ் சினிமாவில் வேணும் என்று கடுமையாக உழைத்து வந்தார். விஜய் மாஸ்டர் படத்தில் நடித்ததன் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தது அவருக்கு. மீண்டும் அவர் மீது ஒரு வெளிச்சம் பட்டது. அதற்குப்பின் சுதா இயக்கத்தில் அவர் நடித்த பாவக்கதைகள் படம் இவர் இறுதியில் கண் கலங்கும் காட்சி, இதனை நாள் தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறி தெரிந்தது. அதுவும் ரசிகர்களால் பயங்கரமா வரவேற்கப்பட்டது.
நடிகை ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய படத்தில் அதுவும் சுதா படம் தான் பெரிய debut. இவங்க நடிச்ச அந்த படத்துக்கு hatersஏ கிடையாது. அப்படி ஒரு முரட்டு performance. இவங்க பாக்ஸர் என்பதால், அந்த ரோல் இவங்களுக்கு சூப்பரா சூட் ஆச்சு, செம்மயா பண்ணிருப்பாங்க. அதற்குப்பின் இவங்க நடிச்ச படங்கள் எல்லாம் இவங்களை தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியா மாத்துச்சு.
நடிகை அதிதி பாலன் இவங்களும் சூப்பரான ஒரு படம் மூலமா தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி. அருவி என்ற படம். இந்த படத்துக்கு இவங்களுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கணும். முதல் படத்திலேயே இப்படி நடிக்க முடியுமா என்று நினைத்தபோது முடியும் என்று நிரூபிச்சாங்க, தமிழ் சினிமா கைவிட்டது ஆனால் மலையாள சினிமா அரவணைத்துக்கொண்டது. இப்போ அங்க இவங்க சூப்பர்ஸ்டார் ஹீரோயின்.
இவர்களுடன் வினோத் கிஷான் வேற இருக்காரு. என்னதான் மிரட்டல் வில்லனாக கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தில் அறிமுகம் ஆகி இருந்தாலும் இப்போ தான் தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நிறைய படங்களில் கமிட் ஆகி இருக்கிறாங்க. இவங்க எல்லாம் சேர்ந்து பண்ணின படம் தான் ஸ்டோரி ஆப் திங்ஸ், இந்த படத்தோட ட்ரைலர் வீடியோ இதோ:
Video:
Presenting you my next 😊#StoryOfThings
— ஷாந்தனு (@imKBRshanthnu) December 26, 2022
A @SonyLIV Original Directed by #GEORGEKANTONEY from 6th January
Along with an fabulous cast : @vinoth_kishan #AnshitaAnand, @AditiBalan @gautamitads @aajkaarjun @bharathhere @linga_offcl , #SidhiqueKM, #Archana @ritika_offl , #Roju pic.twitter.com/SwNDdctdDE