சுந்தர் சி சம்பவம் லோடிங் போல.. இப்படி மிரட்டி வெச்சிருக்காங்க.. ஹாட் தான்யா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Sundar c movie trailer video](/images/2023/07/07/vallaan-video-viral-1-.jpg)
பொதுவா சுந்தர் சி எடுக்கும் படங்கள் ஜாலியா கொஞ்சம் funny ஆக இருக்கும், ஆனால் நடிக்கும் படங்கள் ரத்தம் வெட்டு கத்திக்குத்து என்ற மிரட்டுவார். கடைசியா அப்படி வந்தவொரு படம் பெருசா போகல. தலைநகரம் 2 தான் அந்த படம். ட்ரைலர் ரிலீஸின் போதே தெரிந்தது கேமரா, கிராபிக்ஸ், எடிட்டிங் எதுவும் அந்த லெவெலுக்கு இல்லை.
ஆனால் இந்த வேளாண் படத்தில் எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு. தலைநகரம் 2 படத்தில் இதெல்லாம் பால்ட் என்று சொன்னோமே அதை எல்லாம் இந்த படத்தில் திருத்தி மிரட்டியுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். திரைக்கதையும் ட்ரைலர் போல வேகமாக இருந்தால் படம் தனி ஒருவன் மாதிரி ப்ளாக்பஸ்டர் ஆகும்.
![Sundar c movie trailer video](/images/2023/07/07/vallaan-video-viral-2-.jpg)
ஏன் அந்த படத்துடன் ஒப்பிடுகிறோம் என்றால், அந்த படத்தின் கலரிங் இந்த படத்தின் கலரிங் ஒரே மாதிரி இருக்கு. கவனிச்சு பார்த்தீங்க என்றால் புரியும். சுந்தர் சி ஒரு போலீஸ் எப்படி இருக்குமோ அப்படி மிரட்டலா இருக்காரு. அவரோட பெஸ்ட் லுக் சமீபத்தில். நடிப்பிலும் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. மீண்டும் ஒரு சீரியல் கில்லர் படம்.
இப்போதான் கொஞ்ச நாட்களுக்கு முன்புப்போர் தொழில் என்றவொரு படம் வந்து சக்கைபோடு போட்டது. மீண்டும் அதே கதைக்களத்தில் இன்னொரு படம். இதுவும் ப்ரோமிசிங்கா இருக்கு. கதையில் மூன்று நாயகிகள் அபிராமி, ஹெபா, சாந்தினி, தான்யா என்று பட்டாளமே நடிக்கிறது. நல்ல ட்விஸ்ட் அண்ட் துரன்ஸ் இருந்தால் வெறித்தனமா இருக்கும்.
Video: