என்னடா இது முரட்டு அடி அடிக்கிறாங்க சூர்யா படத்தோட கதாநாயகி.. அம்மாடியோவ்.. திஷா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நடிகர் சூர்யா ரசிகர்கள் ரொம்ப மிகவும் எதிர்பார்க்கும் படம் சூர்யா 42. சிறுத்தை சிவா இயக்கிட்டு இருக்காரு. சூர்யாக்கு படமும் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு, அதனால் ரசிகர்கள் எல்லாம் மரண வைட்டிங்ல இருக்காங்க. எல்லா நடிகர்களுக்கும் ஒரு படம் அல்லது அப்டேட் அச்சும் வருது ஆனால் பாவம் தான் இவங்க. அப்போ அப்போ திசா போடும் போட்டோ/வீடியோ தான் ஒரே ஆறுதல்.
ஒருவனை கேலியும் கிண்டலும் செய்தால் வெறித்தனமான திறமையை வெளிபடுத்துவான். சிவா வெறித்தனமான Script எழுதிட்டார் போல. இதை எப்படி சொல்கின்றோம் என்றால், அண்ணாத்தே படம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே ரிலீஸ் ஆகி பெரிய பிளாப் ஆனது. வசூல் ரீதியாக மட்டுமே படம் வெற்றி. அதனால் தான் சிவா வெறியா எழுதிருக்கார் என்று நம்புகிறோம்.
இந்த படத்தின் கதாநாயகி திஷா பட்டாணி, பாலிவுட் சூப்பர்ஸ்டார் இவங்க. இவங்க ஏன் படத்தில் இருக்காங்க என்று கேள்வு எல்லாருக்கும் இருப்பது போல எங்களுக்கும் இருக்குது ஆனால் காரணம் இல்லாமல் பாலிவுட் நட்சத்திரத்தை செலக்ட் செஞ்சிருக்கமாட்டார் சிறுத்தை சிவா. இது பயங்கரமான பீரியட் படம் என்று சொல்லப்படுது.
சூர்யாக்கு இருப்பது போல, திஷாக்கும் சண்டை காட்சிகள் எல்லாம் இருக்கும் போல படம் முழுவதும். அதனால் இவங்க பயங்கரமான ட்ரைனிங்கில் இருக்காங்க. அந்த வீடியோ ஒன்று இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு. அயூஉ என்ன உடம்பு டா சாமி அது, சும்மா ரப்பார் மாதிரி வலையுது. அதுவும் அந்த கிக் ஒன்னு விட்டாங்க பாருங்க. மாசா இருக்கு. அந்த வீடியோ பாருங்க.
Video:
#Watch | ‘சூர்யா 42' பட நடிகை திஷா படானியின் சாகசம்!#SunNews | #DishaPatani | #Suriya42 | @Suriya_offl | @directorsiva | @DishPatani pic.twitter.com/KJKubXXhPb
— Sun News (@sunnewstamil) February 7, 2023