தரமான சம்பவம் பண்றோம் சார்.. அந்த லுக்கே அவ்ளோ சொல்லுது.. சூர்யா 42 பூஜா போட்டோஸ் வைரல்.
சூர்யா நடிக்கும் 42வது படத்தின் பூஜை வெற்றிகரமாக முடிந்தது. பாகுபலி, KGF பாணியில் இரண்டு பெண்களாக உருவாக இருக்கிறது இந்த படம் அதுமட்டுமில்லாமல் இந்த படம் period படம் என்று சொல்லப்படுகிறது.
முதலில் சில நாட்கள் சென்னையில் படத்தின் ஷூட்டிங் பண்ணிவிட்டு, மிச்ச படப்பிடிப்புகளை கோவாவில் தான் பண்ண இருக்கிறார்கள். அங்கு மிகப்பெரிய பொருட்செலவில் செட் உருவாகி வருகிறது என்பது கூடுதல் தகவல்.
இசையமைப்பாளராக ராக்ஸ்டார் DSP ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகி பற்றிய அறிவிப்பு தான் இன்னும் அதிகாரபூர்வமாக வரவில்லை என்றாலும் பூஜா ஹெக்டே அல்லது திசா பட்டணி தான் இருப்பர் என்று நம்பகத்தக்க தகவல்கள் வெளியாகி வருகின்றன .
இந்த படத்தை UV creations, ஞானவேல்ராஜா இணைந்து தயாரிகின்றனர்.