ரஜினி எல்லாம் இல்ல, எனக்கு முன்மாதிரினா உலகநாயகன் கமல் தான். சூர்யாவின் பேட்டி. முழு விவரம்.
நீண்ட நாள் கழித்து நடிப்பின் நாயகன் சூர்யா வந்து பிரபல நாளிதழுக்கு போட்டோஷூட் எல்லாம் கொடுத்து பேட்டியும் கொடுத்துள்ளார். அந்த பெட்டியில் அவர் உலகநாயகன் கமலஹாசனை பற்றி கூறிய வார்த்தைகள் தான் தற்போது இணையத்தில் வைரல். காமோலோட எவ்வளவு தீவிரமான ரசிகர் சூர்யா என்று இதிலிருந்தே தெரிகிறது.
கமல் சார், அவர் சந்தைக்கான படங்களையும் தருவார். பரிசோதனை முயற்சிகளையும் தொடர்வார். முக்கியமாக நான் அவரிடம் மதிக்கும் பெரிய விஷயம், ஒரு போதும் துவண்டுபோக மாட்டார். பெரிய தோல்விப் படத்தைக் கொடுத்திருப்பார், அடுத்து வரும் போதும் இன்னும் பெரிய படத்துடன் தான் வருவார். அதுவும் பாதுகாப்பான ஒரு படமாக இருக்காது, நான் யோசிப்பேன், ஒரு தோல்வியிலிருந்து அவர் நினைத்தால் மிக எளிதாக வெளியே வரலாம்.
சகலகலா வல்லவன் சக்சஸ் ஃபார்முலா படங்களில் ஒன்றாக பேசப்படுவது. அடுத்து ஏன் அவர் அதே மாதிரி ஒன்றோடு திரும்ப வருவதில்லை? திரும்பவும் ஒரு வணிக வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தால் கூட அவர் அபூர்வ சகோதரர்கள் தான் யோசிக்கிறார்? இது எனக்கு வாழ்நாள் பாடம் போலவே இருக்கிறது. எளிமையான வெற்றியைவிட அர்த்தமுள்ள வெற்றியே எனக்கு வேண்டும். ஜெயிக்க வேண்டும், ஆனால், அது பேசப்படும் நல்ல படமாகவும் இருக்க வேண்டும்.
என் முன்னோடி கமல் சார் ஜெய் பீம் பார்த்து அரை மணி நேரம் பேசினார். இந்தப் படம் எங்கேயும் சினிமாவாகத் தெரியவில்லை. நல்ல படம் வந்தாலே பார்த்துவிட்டு பாராட்டுவதில் கமல், ரஜினியை யாராலும் அடிச்சுக்க முடியாது. நான் இந்த மாதிரி படங்களைச் செய்யத்தான் ஆசைப்படுகிறேன் ஆனால், என்னிடம் யாரும் இப்படி ஒரு கதையை எடுத்து வரவே இல்லை என கூறினார். கமலுக்கு பாருங்க அந்த படத்தை பார்த்துவிட்டு எவ்வளவு தாக்கம் கமலுக்கு ஏற்படுத்தியிருக்கு என்று.