எப்படி இருந்த மனுஷன்.. நம்மையே கண் கலங்க வெச்சுட்டாரு. ஜோதிகா கண்ணுல தண்ணி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சூரியா கடந்த சில வருடங்களாக அதாவது சூரரை போற்று படத்துக்கு முன்னாடி சில படங்கள் சரியாக போகவில்லை. அதனால் அவர் மனஉளைச்சலில் இருந்தார் என்பது தற்போது நடந்த பிலிம்பேர் நிகழ்ச்சியில் அவரின் பேச்சில் தெரிந்தது. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், கோடிகோடியாக சம்பாதித்தாலும் ஒரு படம் தோல்வி அடைந்தாள் அவங்களை மனரீதியாக எப்படி பாதிக்கிறது என்று உணர்ந்த நாள் இன்று.
சூர்யா மட்டுமல்ல எல்லா நடிகருகளுக்கும் இந்த phase இருக்கும், அதை எப்படி காட்டுகிறோம் என்பதில் இருக்கிறது விஷயம். இவ்ளோ படங்கள் தோல்வி அடைந்தாலும் இன்னும் நிக்குறான் பாரு அப்படிங்கிறது தான் கெத்து. இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் ரசிகர்கள் துணை நின்றனர். இவர் 2010லிருந்து கொஞ்ச ஆண்டுகள் விஜய், அஜித்தையே மிஞ்சினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவங்க மூணு பேரும் தான் இப்போ தமிழ் சினிமா. இவங்க படம் வந்தால் தான் கொண்டாட்டம், திருவிழா எல்லாம்.
அந்த வீடியோவில் ஒரு டச்சிங் விஷயம் என்றால் சூரிய வாங்கிய விருதை இயக்குனர் சுதாவுக்கு டெடிகேட் செய்தது தான். கண்டிப்பா சூர்யா மறக்கமாட்டாரு அவங்களை. ஏனென்றால் நீண்ட நாட்களுக்கு பிறகு எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான படம் ஒரு படம், ரசிச்சு மீண்டும் மீண்டும்பார்த்தனர். ஒரே குறை திரையரப்பிங்கில் ரிலீஸ் ஆகவில்லை என்பது தான். இனி சூர்யாக்கு ஏறுமுகம் தான். மீண்டும் பாலையா பார்முக்கு திரும்புகிறார்.
வணங்கான் மற்றும் வாடிவாசல் வந்ததுக்கு அப்புரம் குறை சொல்லும் எல்லாரும் கண்டிப்பாக வியந்து பாப்பாங்க இந்த நடிகனையா நம்ம குறை சொன்னோம் என்று இது நடக்கும்.
Video:
U DONT HAVE TO SAY THIS , NOT AT ALLLLL 😭 pic.twitter.com/qGjlXJ1eDY
— G (@its___gowtham) October 17, 2022