இவர் இல்லனா வேற யாரு.. விருதை தட்டி தூக்கிய சூர்யா. அந்த கெட்டப். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Suriya jo at filmfare video viral

நேற்று filmfare விருதுகள் நடைபெற்றது. இதை பல துறைகளை, பல மொழிகளை சார்ந்த கலைஞர்கள் அனைவர்க்கும் விருது வழங்கப்பட்டது. எப்படி நேஷனல் விருது, இந்தியாவின் மிகப்பெரிய விருதோ, அதேபோல் தான் filmfare விருதும். நடிகர்களாக இருப்பவர்கள் எப்படியாவது இந்த விருதை வென்றுவிட வேண்டும், அப்போது தான் அவர்கள் செய்த வேலைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது போல.

சூர்யாக்கு கடந்த வருடத்திலிருந்து ஏறுமுகம் தான் என்று கூறலாம். அவரின் வெற்றி சதவீதம் அப்படியே கொஞ்சம் கீழே சென்று கொண்டிருந்த போது ஒரு தரமான படம் என்றால் அது சூரரை போற்று தான். அவரை மீண்டும் முதன்மை நாயகர்களின் இடத்தில் நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த படத்தின் வெற்றிக்கு பின் அவருக்கு தொட்டதெல்லாம் பொன் தான். வாழ்க்கையில் ஒரு சரிவு இருக்கும், திரும்பி நம்ம எந்திரிச்சு நிக்கிறது தான் கெத்து. சூர்யா நின்றுவிட்டார், அடுத்து அதகளம் தான்.

நேற்று சிறந்த நடிகருக்கான விருதை சூரரை போற்று படத்திற்காக சூர்யா வாங்கினார். இது எல்லாம் இவரை தவிர யாருக்கு சரியானதா இருக்கும். அந்த படத்திற்கு சமீபத்தில் தேசிய விருதே கிடைத்துவிட்டது. நினைத்தாலும் யாராலும் மாற்ற முடியாது, கடந்த வருடத்தின் சிறந்த நடிகர் சூர்யா தான். மேலும் அவருக்கு தயாரிப்பாளராக இன்னொரு விருதும் கிடைத்துள்ளது. ஜெய் பீம் படத்தை தயாரித்ததற்காக சிறந்த தயாரிப்பாளர் விருது. 2டி சார்பில் சூர்யா மனைவி ஜோதிகா அதை பெற்றுக்கொண்டார்.

Suriya jo at filmfare video viral

நேற்று இரவு முதல் சூர்யா -ஜோதிகா புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். அவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு பீரியட் படம் பண்ணி வருகிறார். அந்த படத்தின் கெட்டப்புடன் வந்திருந்தார். சும்மா மிரட்டுது லுக். பெரிய சம்பவம் அடுத்த வருடம் பண்ண தயார் ஆகிட்டாங்க.

Video:

Related Posts

View all