கங்குவா கிளிம்ப்ஸ்.. பிரமிப்பு... பிரமிப்பு... பிரமிப்பு.. சிறுத்தை சிவா சம்பவம் டா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் Glimpse தற்போது வெளியாகியுள்ளது. ரொம்ப நாளா இந்த படத்தில் சிவா என்னதான் பண்ணி வெச்சிருக்காரு என்பதை பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தோம். இப்போது தெரியுது மொத்த டீம்முடைய உழைப்பும். ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க.
அனல் பறக்க …அம்புகள் தெரிக்க… ஆக்ரோசமாக நடித்த கங்கு…கங்குவாவை பார்த்தேன்.ரசித்தேன்..10 மொழி பிரமாண்டம் வெற்றி அடைய வாழ்த்துகள். பிறந்த நாள் வாழ்த்துகள் சூர்யா சார்.. 2024ன் பெரிய படம் எது என்று கேட்டல் கண்டிப்பா இந்த படத்தை சொல்லலாம். கண்டிப்பா ஒரு 500 கோடி வசூல் செய்ய எல்லா தகுதியும் உள்ள ஒரு படம் இது.
கங்குவா இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி படக்குழுவுடன்… கங்கு என்றால் தீ.. அந்த அர்த்ததில் கங்குவா… படத்தில் போர்க்காட்சிகள் மிரட்டலாக இருக்கும் என்று பிரெஸ்கிட்ட சொல்லிருக்காங்க. இதுதான் சிறுத்தை சிவாவோட கனவு படம். அதனால் ரொம்ப மெனக்கெட்டு கஷ்டப்பட்டு நிறைய விஷயங்கள் பண்ணிருக்காங்க, அது நல்லா தெரியுது.
கிளிம்ப்ஸ்ல குறையே இல்லையா என்றால் இருக்கு. எப்போவும் போல நல்ல கதையில் vfx காட்சிகள் வெச்சு சொதப்புவாங்க இல்ல அந்த மாதிரி தான் இதிலும். அது பெருசா ஒர்கவுட் ஆகவே இல்லை. சூர்யாவின் முகத்தை காட்டின பிறகு தான் அந்த ஒரு 30 வினாடிகள் தான் தெறிக்க விட்டிருக்காங்க. அதற்கு முன்னாடி எல்லாம் கொஞ்சம் கம்மி தான்.
Video: