தன்னை விட 20 வயது சின்ன பெண்ணுடன் ஜோடி போடும் சூர்யா.. லேட்டஸ்ட் ஹாட் நியூஸ் ட்ரெண்டிங்.
தற்போது சூர்யா குடும்பத்தின் வாசம் பாலிவுட்ல அடிக்கிறது. குழந்தைகளின் கல்விக்காக மும்பை மூவ் ஆனாங்க. பின்னர் ஹிந்தி படங்களை தயாரிக்க ஆரம்பித்தாங்க, ஹிந்தி படங்களில் ஜோதிகா நடிக்கிறாங்க. தற்போது லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் நடிப்பின் நாயகன் சூரியாவும் ஹிந்தி படத்தில் கால்தடத்தை எடுத்து வைக்கும் முயற்சியில் உள்ளார்.
இதுவரை சூர்யா போட்ட கணக்கு தப்பவேயில்லை. தமிழிலும் இப்போ நல்ல இடம் தான் அவருக்கு. மேலும், கங்குவா படம் ரிலீஸ் ஆனால் பான் இந்தியா ஸ்டார் ஆக வாய்ப்பிருக்கு. ஏனென்றால் இந்த படம் 15க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் updates வரும் இன்னும் சில தினங்களில்.
தற்போது பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க கமி ஆகியிருக்காரு. அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறாங்க என்ற செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. ஜான்விக்கு இப்போது தான் சரியான படங்கள் அமைகிறது. ஜூனியர் NTRகூட ஒரு படம், இப்போ சூர்யா. இனி இவங்க range வேற லெவல் தான்.
இவங்களோட ரீசன்ட் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல். விஜய் வேற சினிமாவில் இப்போது இல்லை, இது சூர்யாக்கு அந்த முதலிடத்தை பிடிக்க சரியான நேரம்.