ஹீரோயின் மட்டும் நச்சுனு புடிக்கிறாரு பாலா.. வணங்கான் படம்.. அருண் விஜய் ஹீரோ.. ஹீரோயின் போட்டோ வைரல்.
சூர்யாவை தொடர்ந்து ஹீரோயினையும் மாற்றிய பாலா: வேகமெடுக்கும் ‘வணங்கான்’.! பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகியதை அடுத்து, அருண் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், நாயகி க்ரி்ரிதி ஷெட்டிக்கு பதில் நடிகை ரோஷிணி பிரகாஷ் நடிக்க உள்ளதாக தகவல்.
படம் கைவிடப்படாது என்று இயக்குனர் பாலா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் “வணங்கான்” திரைப்படத்தில் நாயகியாக கன்னட நடிகை ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார் என்று உறுதியாகவும் கூறுகின்றனர். இப்போ ஏ.எல் விஜய் படத்தில் க்ளாஸாக நடித்து வரும் அருண் விஜய்க்கு ரசிகர்களின் அட்வைஸ் இது:
இப்பவே எஞ்சாய் பண்ணிக்கோங்க விக்டர். அடுத்த #பாலா படத்துல பூரா கிழிந்த துணிதா காஸ்டியுமாம்…
பாலா சேதி வெளியிட்ட ஒரு மணிநேரத்தில்,பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம்.எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோயின் மட்டும் தரமா சூஸ் பண்ணிருக்காரு. முன்னாடி கீர்த்தி ஷெட்டி. பாவம் 20 வயது பெண்ணிற்கு இந்த மாதிரி ஒரு debut தமிழில் வேண்டுமா என்று நினைத்த ரசிகர்கள் இப்போ கொஞ்சம் பெருமூச்சு விட போறாங்க. பாவம் கன்னட ஹீரோயின் மாட்டிக்கிட்டாங்க. ஆனால் விருது வாங்கும் அளவுக்கு நடிக்க வெச்சிடுவாரு.