சூர்யாவை ரொமான்ஸ் செய்ய போகும் இந்த பாலிவுட் திவா. ஹாட் போட்டோஸ் வைரல்.
சமூக வலைதள பக்கங்கள் அனைத்திலும் சூர்யா நடிக்கும் 42 வைத்து படத்தை பற்றியே தான் பேச்சு கடந்த ஒரு வாரமாக.
ஒரு வழியாக சிறுத்தை சிவா தான் பண்ணுகிறார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விரைவில் பூஜா போடப்பட்டு முதல் 5 நாட்கள் சென்னையிலும் பின்னர் படக்குழு மொத்தமாக கோவாவுக்கு செல்கின்றனர்.
இந்த ப்ராஜெக்ட் பீரியட் படம் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இசையமைப்பாளராக ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்திருக்கிறார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட செய்தி யார் கதாநாயகி என்று. சிலர் பூஜா ஹெக்டே என்று சொல்லி வந்தனர். ஆனால் இப்போது நமது நம்பகத்தக்க செய்தி வட்டாரம் பாலிவுட் சூப்பர்ஸ்டார் திசா பாட்னியை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை uv creations நிறுவனத்துடன் இணைந்து ச்டுடயோ க்ரீன் கண்னவேல் ராஜா தயாரிக்கிறார்.