உண்மையாவே இவரு தான் தமன்னா பாய் பிரண்டா.. ஜாலியா சுத்திட்டு இருக்காங்க. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
![Tamana dating latest click update](/images/2023/04/25/tamanna-bhatia-with-vijay-varma-2-.jpg)
இன்னைக்கு பல ரசிகர்களின் இதயம் நொறுங்கியிருக்கும் காரணம் நடிகை தமன்னா அவங்களோட பாய் பிரண்டு கூட ஜாலியா ஊர் சுத்திட்டு இருக்காங்க என்ற செய்தியால் தான். பல இதயம் நொறுங்கிய சவுண்ட் கேட்டது இணையதளத்தில், என்னனு வந்து பார்த்தால் இந்த செய்தி. ஏற்கனவே இவங்க இருவரும் டேட் செய்றாங்க என்ற செய்தி வந்தது.
ஆனால் இந்த நேரத்திலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர் தோழரா இல்லை உண்மையாவே தமன்னா லவ் பண்ணும் நபரா என்று தெரியவில்லை. ஆனால் இன்று சினிமா கிசு கிசு செய்திகள் எல்லாம் சேனல்களிலும் இவங்களோட புகைப்படம் தான் வைரல். அதுவும் காரில் போய்ட்டு இருக்கும் போது கிளிக் பண்ணிருக்காங்க நம்ம பசங்க.
![Tamana dating latest click update](/images/2023/04/25/tamanna-bhatia-with-vijay-varma-1-.jpg)
அந்த பையனும் ஒரு நடிகர் தான், அவருடைய பெயர் விஜய் வர்மா. நிறைய ஹிந்தி படங்களில் நடித்திருக்காரு. நிறைய நல்ல படங்களில் நடிச்சிருக்காரு. இவர் பெருசா எதிலும் ஹீரோவா பண்ணியதில்லை ஆனால் பவர்புல் சப்போர்டிங் ரோலில் சும்மா பிரிச்சு மேஞ்சிருவாரு. இந்திய லெவெலில் ஹிட் அடித்த மிர்சாபூர் தொடரில் கூட நடிச்சிருந்தாரு.
அவருக்கு வயது 3 ஆனால் பார்க்க சின்ன பையன் மாதிரி தான் மொழு மொழுன்னு இருப்பாரு. இப்போ தமன்னா அவங்களோட சினிமா பீக்ல இருக்காங்க. சூப்பர்ஸ்டார் கூட ஜெயிலர் படத்தில் வேற ரொம்ப முக்கியமான கதாபாத்திரம், படம் வேற லெவெலில் வந்திருக்கு போல. ஆகஸ்டில் ஜெயிலர் படத்தில் தமன்னா தரிசனம் உறுதி.