பிளாப்ன்னு சொன்ன படம் நான்காவது இடத்தில்.. அதனால் தான் அவரை.. தமிழ் சினிமாவின் 2022 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.

Tamil cinema box office report update

2022ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல ஆண்டாக தான் அமைந்தது. முக்கியமான படங்கள் 2022 முதல் பாதியில் ரிலீஸ் ஆனது. ஆனால் அந்த படங்கள் தமிழ் சினிமாவிற்கு கைகொடுக்கவில்லை என்பது தான் உண்மை. முதலில் அஜித்தின் வலிமை படம், அவ்வளவு எதிர்பார்ப்புடன் வந்தது ஆனால் பாக்ஸ் ஆபிசில் ஒருஅளவுக்கு வசூல் செஞ்சது ஆனால் படமாக பார்த்தால் பெரிதாக ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதே உண்மை. ஆனால் அப்போது வந்த RRR படத்தை பற்றி இப்போதும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அடுத்து தளபதி விஜயின் பீஸ்ட் படம். உலகமே எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு படமான KGF 2ம் பாகத்துடன் ரிலீஸ் அனைத்து. எதிர்பார்த்தது போலவே நெல்சன் கொஞ்சம் சொதப்ப படம் பெரிதாக போகவில்லை, ஆனாலும் கூட விஜயின் ஸ்டார் பவர் காரணமாக இந்த படம் 4ம் இடத்தில இருக்கிறது. ஒரு வேலை ஹிட் ஆகியிருந்தால் யோசித்து பாருங்கள். மீண்டும் மற்ற மொழி படங்களிடத்தில் அடி. KGF 3ம் இடத்தில இருக்கிறது.

Tamil cinema box office report update

அப்போது வந்த டான் படம் தான் தமிழ் சினிமாவை கொஞ்சம் காப்பாற்றியது. யாரும் எதிர்பார்க்கவே இல்ல இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று. ஆனால் செஞ்சது. எல்லாருக்குமே ஆச்சர்யம். சிவகார்த்திகேயன் career-ல் இந்த படம் முக்கியமான படமாக அமைந்தது. பின்னர் இந்த படத்துக்கு பின் ஜூன் மாதம் விக்ரம் படம் மூலம் ஆரம்பித்தது. கமலஹாசனின் ருத்ர தாண்டவம் என்று சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் கொஞ்ச நாள் பிரேக் எடுத்துட்டு திரும்பவும் வந்தா விக்ரம் மாதிரி படம் மூலம் தான் comeback கொடுக்கணும் என்று ஆணித்தரமாக பதிவு செய்த படம் அது. 400 கோடிக்கு மேல் வசூல் செஞ்சு மாஸ் காட்டியது. அதற்குப்பின் வந்த பொன்னியின் செல்வன் படம் தமிழ் சினிமாவின் pride ஆனது. 500 கோடிக்கு மேல் வசூல் செஞ்ச இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்குகாக மரண வைட்டிங்.

இந்த படங்களின் வெற்றிக்கு பின் ரிலீசான சர்தார், லவ் டுடே எல்லாம் தமிழ் சினிமா மானத்தை காப்பாற்றியது. மேலும், அடுத்த வருடம் முதல் மாதத்திலேயே இரண்டு பெரிய படங்கள் வருகிறது. ஆரம்பமே தூள் தான். வாரிசு, துணிவு இரண்டும் பெரிய ஹிட் ஆகணும்.

Top Movies List: (Based on wiki)

Related Posts

View all