எல்லா பெரிய இயக்குனர்களின் கனவு படத்தின் நாயகன் ஒருவரே.. அந்த பெயர் தான் சூர்யா. முழு விவரம்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக அவர்கள் எடுக்கும் படமோ, அல்லது எழுதும் கதையிலோ கனவு கதை, இதுதான் என் கனவு படம் என்று ஒன்று இருக்கும்.
அப்படி இப்போதைய இயக்குனர்களின் கனவு படம் அனைத்திலும் நாயகன் சூர்யா தான்.
இயக்குனர் வெற்றிமாறன்: தமிழ் சினிமாவின் பெஸ்ட் இயக்குனர் என்றால் இவரைக் கூறலாம். இவரின் கனவு படம் தான் வாடிவாசல். இந்த படத்தில் சூர்யா தான் கதாநாயகன். படம் ஆரம்பித்துவிட்டது. சூர்யா பிறந்தநாளன்று வெளியிட்ட டீசர் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.
லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் லோகேஷ் தான் சமீபத்திய sensation. தளபதி விஜய், கமல் என்று பெரிய சூப்பர்ஸ்டார்களோடு படம் பண்ணினாலும் இவருக்கு கனவு கதை ‘இரும்புக்கை மாயாவி’. லோகேஷிடம் இந்த கேள்வியை கேட்கும் போதெல்லாம் அவர் கூறுவது இந்த கதை நான் பண்ணினால் அது சூர்யாவுடன் தான் என்று.
பா.ரஞ்சித்: இயக்குனர் பா.ரஞ்சித்தின் கனவு படம் ‘ஜெர்மன்’, இவர் எழுதிய கதைகளிலேயே அவரின் கிளோஸ் டு ஹார்ட் கதை அதுவாம். அந்த படத்தின் நாயகனும் சூர்யாதான்.
சுதா கொங்கரா: இயக்குனர் சுதா இப்போது ஹிந்தியில் சூரரை போற்று படம் பண்ணி வருகிறார். மீண்டும் சூர்யா - சுதா இணையும் படம் தான் அடுத்து, hombale பிலிம்ஸ்காக பண்ணும் படம். அவர்கள் தான் KGF படத்தின் தயாரிப்பாளர்கள். இந்த படம் தான் சுதாவின் ட்ரீம் ப்ராஜெக்ட்.
சிறுத்தை சிவா: இயக்குனர் சிறுத்தை சிவாவின் அடுத்த படம் சூர்யா 42. இந்த படம் ஒரு பீரியட் படம் என்று சொல்லப்படுகிறது. கிராமத்து கதை, action படம் என்று பண்ணி வந்த சிவாவிற்கு இது புது முயற்சி.
அனைத்து பெரிய இயக்குனர்களின் கனவு படத்திலும் சூர்யா தான் கதாநாயகன். மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுக்க போகிறார்.