விஜய் ஆண்டனி சும்மா மிரட்டியிருக்காரு.. ஹாட் சங்கீத.. ரம்யா வேற இருக்காங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Tamilarasan trailer video viral](/images/2022/12/12/tamilarasan-trailer-video-2-.jpg)
நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கிறது. எப்போதுமே இவர் படம் என்றால் மக்களுக்கு கொஞ்சம் சாப்ட் கார்னெர் இருக்கும். அதுஎன்னவென்றால் “நடிகர் மற்றும் இசையப்பாளருமாகிய விஜய் ஆண்டனி தேசத்திற்கு எதிராக படம் எடுத்தும் நடித்தும் பார்த்ததில்லை மற்றும் சமூகத்திற்கு இடையே பிரிவினையை உண்டு செய்து படம் எடுத்ததாக தெரியவில்லை எல்லா மதங்களையும் உயர்த்தியே படம் எடுத்துள்ளார் இப்பேர்ப்பட்ட திரைத்துறையினர் பாராட்டுக்குறியவர்களே” என்பது தான் அது.
இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் “தமிழரசன்"படப்பிடிப்பு 2019ம் ஆண்டு சென்னையில் துடங்கியது. ஆனால் பல்வேறு தடைகளுக்கு பின் இப்போது தான் படம் திரைக்கு வர இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜா இன்னொரு இசையமைப்பாளர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரித்திருக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்குனர்.
![Tamilarasan trailer video viral](/images/2022/12/12/tamilarasan-trailer-video-1-.jpg)
விஜய், சிவகார்த்திகேயன்க்கு அடுத்து விஜய் ஆன்டினி தான் எனக்கு தெரிஞ்சி பேமிலி ஆடியின்ஸ் கவர் செஞ்சி இருக்குறது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு நாள் வீட்ல அம்மாவிடம் பேசும் போது, ஏதோ விஜய் ஆண்டனி படம் வந்துச்சே, அந்த படம் இருந்தா போடு என்று கேட்டாங்க. அது எந்த படம் என்றால் கோடியில் ஒருவன். அதற்கு காரணம் இவர் நல்ல நல்ல படங்களை ஆபாசம் இல்லாமல் நடித்து வருவது தான். இவரின் அடுத்த லைன்அப்பில் இருக்கும் படம் கூட அப்படி தான்.
இந்த படத்தில் பெரிய பட்டாளமே நடிச்சிருக்கு. மலையாள சூப்பர்ஸ்டார் சுரேஷ் கோபி நடிச்சிருக்காரு, சங்கீத, ரம்யா நம்பீசன், கஸ்துரி, ராதா ரவி, சோனு சூட் அப்டின்னு பெரிய பட்டாளமே நடிச்சிருக்கு. விஜய் ஆண்டனியின் தரமான த்ரில்லர் படங்களான நான், சலீம் போன்று இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரைலர் ரொம்ப ப்ரோமிசிங்கா இருக்கு.
Video: