சாதிவெறி எண்ணத்துக்கு சவுக்கடி கொடுக்கும் போலயே. சேரனின் தமிழ்க்குடிமகன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சாதிவெறி எண்ணத்துக்கு சவுக்கடி கொடுக்கும் அன்பு நண்பர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில், இயக்குநர் சேரனின் நடிப்பில் வெளிவரும் “தமிழ்க்குடிமகன்” படத்தின் டீசரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று அரசியல் விமர்சகர் இந்தப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளார். எனக்கான விடுதலையை நான்தான் போராடி வாங்கனும். இதுதான் படத்தின் கரு.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சேரன் சார் அவருடைய நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது தமிழ் குடிமகன் தமிழ் தேசியம் பேச வேண்டும் என்று சில மக்கள் வேண்டுகோள். தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் சிலரால் மட்டுமே உணர முடியும் இந்த வலியை என்பதுபோல் இருக்கிறது ஒவ்வொரு காட்சிகளும். மிகச்சிறந்த கதைக்களம், தமிழ் திரைக் கலைஞர்கள், தமிழ் இயக்குனர், தமிழ் தயாரிப்பாளர். இப்படத்தை பெரும் வெற்றி பெற செய்ய வேண்டும் தமிழர்கள்.
இட ஒதுக்கீடு தரும் சமத்துவம், பலம், பாதுகாப்பை விட, எந்த ஒரு தத்துவமோ, கட்சிகளோ காட்டும் விடுதலையை விட, நமக்கான நிரந்தரமான விடுதலையை , மரியாதையை நம்மால் மட்டுமே உண்மையாக அடைய முடியும். இந்த கருத்து அனைவரையும் சென்று சேரட்டும்.
சேரனின்: பொற்காலம் பாரதி கண்ணம்மா பாண்டவர் பூமி வெற்றிக்கொடி கட்டு ஆட்டோகிராஃப் தவமாய் தவமிருந்து பொக்கிஷம் இந்த அனைத்து படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்! உங்களுக்கு? இந்த வரிசையில் இந்த படமும் இணையும் என்று நம்புவோம்.
Video: