மீண்டும் சாதிய படம் இந்த தடவை சேரன் கிட்ட இருந்து.. தமிழ்க்குடிமகன் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Tamilkudimagan video viral

“நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு”

நேற்றிருந்த ஒருவன் இன்றில்லை எனச் சொல்லும்படியான நிலையாமையை உடையது இவ்வுலகம்! இதில் சாதிபேதம் எதற்கு?

சமூகநீதி பேச விரைவில் வருகிறான்👍 #தமிழ்க்குடிமகன் 🤝

தமிழ்க்குடிமகன் ட்ரைலர் உண்மையின் ஒரு பக்கத்தை காட்டியிருக்கிறது. படம் வெற்றி பெறட்டும், சாதிய அரக்கனின் தலையில் இடி விழட்டும். தமிழ்க்குடிமகன் திரைப்படம் உங்கள் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தினால், சாதியத்தை ஒழிக்க நிச்சயம் உதவும் என்று இயக்குனர் அமீர் வேற குறிப்பிட்டிருக்கிறார்.

Tamilkudimagan video viral

Trailer ல் கதாநாயகன் பட்டியல் இனத்தவர் என்று வருகிறது. இந்த தொழில் செய்பவர்கள் பட்டியல் இன சாதிகளின் list ல் வரமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் ஏன்‌ அரசின் பட்டியல் இன listல் சேர்க்கவில்லை என்பதை அல்லது இவர்களின் சரியான சாதி மட்டும் கூரி இப்படம் இவர்களின் பிரச்சினையை பேசினால் சரியாக இருக்கும். ஏனென்றால் இது போன்ற படங்கள் வரும் போது எதிர்வினையாளர்கள் இதை பயன்படுத்தி இந்த இன மக்களையே குழப்பிவிடுகின்றனர்.

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். Trailer அருமையாக உள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Video:

Related Posts

View all