பழைய ரைட்டு ஆக வந்து சம்பவம் செய்த சுந்தர் சி. பாலக் செம்ம ஹாட். தலைநகரம் படத்தின் பார்ட் 2 வீடியோ வைரல்.

Thalainagaram 2 trailer video viral

சுந்தர் சியின் தலைநகரம் படம் அப்போ வந்த ஒரு காங்ஸ்டர் படங்களில் அதுவும் சற்று வித்தியாசமான படம் தான். அன்றைய காலகட்டங்களில் நடிகர் சுந்தர் சிக்கு செமத்தியா ஓடிய படம் அது. எப்போதுமே சுந்தரை இயக்குனராக பார்த்த நடிகர்கள் நடிகராக பார்த்து மிரண்டனர். என்னடா இப்படி நடிச்சுட்டு போய்ட்டாரு என்று. அந்த படம் மட்டும் ஹிட் ஆகாமல் இருந்திருந்தால் இந்நேரம் சுந்தர் நிறைய படங்களை இயக்கியிருப்பார்.

அந்த படம் ஹிட் ஆனதால் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்தார், அதில் ஒரு சில படங்கள் நன்றாக ஓடியது. ஒரு சில படங்கள் குப்பை படம் ஆனது. ஆனாலும் இவர் எடுக்கும் படங்களுக்கு ஆடியன்ஸ் வரவு எப்போதுமே குறைந்ததே இல்லை. இவருடைய மிகப்பெரிய ப்ளஸ் காமெடி மற்றும் கிளாமர் தான். இதைவைத்தே எப்படியும் படத்தை ஓட்டிவிடுவார். கடைசியில் ஒரு எமோஷன் வெச்சு சூப்பரா முடிப்பார்.

Thalainagaram 2 trailer video viral

இயக்குனர் துரையிடம் தன்னை அர்ப்பணித்து கொண்டார் போல இந்த படத்தில். அவர் ஒரு நல்ல underated இயக்குனர். எடுத்த படங்கள் எல்லாமே னால படங்கள், மோசமான படம் துன்று எதையும் சொல்ல முடியாது. கடைசியாக இவர் சுந்தர் சியை வைத்து இயக்கிய இருட்டு படம் நீண்ட நாட்களுக்கு பின் சுந்தருக்கு ஒரு ஹிட்டாக அமைந்தது. அதனால் தான் அவர் நடிக்கும் அடுத்த படத்தையும் அவரிடமே ஒப்படைத்து விட்டார்.

இந்த படத்தில் மீண்டும் அந்த ரைட்டு என்ற காங்ஸ்டரை தட்டி எழுப்பி கூட்டிட்டு வந்திருக்காரு. பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் உண்மையாக நடக்குமா என்று நினைப்போம், ஆனால் உண்மை சம்பவங்களை தழுவி என்று போடும்போது அய்யோ நடந்திருக்கிறதா என்று மனம் பதறும். அப்படி தான் இருக்கிறது இந்த படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் என்று நினைக்கிறோம், இந்த படம் prequelஆ அல்லது sequelஆ என்று தான் தெரியாவில்லை.

வீடியோ:

Related Posts

View all