மாசுவும் வசனம் இருக்கு.. அந்த மாதிரியும் வசனம் இருக்கு.. ஆனா மிரட்டுது.. தலைநகரம் 2 வீடியோ வைரல்.
“சுந்தர்சியோட” சூப்பர் ஹிட் படம் தலைநகரம் அதோட அடுத்த பாகம் வருது என்ற செய்தி எப்போ வெளியாச்சோ அப்போ இருந்தே இந்த படத்திற்கான hype சினிமா ரசிகர்களுக்கு எகிறியே இருக்கு. காரணம் அப்போ வந்த படங்களில் இந்த தலைநகரம் படம் ஒரு முக்கியமான படம். காமெடி, action என்று எல்லா டிபார்ட்மென்ட்லையும் கலக்குச்சு.
அந்த படத்தில் நாயகனின் பெயர் ரைட்டு. இந்த படம் ரிலீசுக்கு பின் உள்ளூர் ரவுடிகள் எல்லாம் இந்த பெயரை தான் அவங்களுக்கு பட்டபெயரா வெச்சுட்டு திரிஞ்சாங்க. அந்தளவுக்கு இந்த கதாபாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போ மீண்டும் வேறு கதையுடன், அந்த கதாபாத்திரம் திரும்ப வருகிறது என்றால் hype இல்லாமல் இருக்குமா.
இந்த படத்தின் கதை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், கரணம் VL துரை கொஞ்சம் கதையில் கவனம் செலுத்துவார். கொஞ்சம் பழைய இயக்குனர் என்பதால் திரைக்கதை பழசு பிளா தான் இருக்குது, கேமரா இன்னும் கூட சிறப்பாக செய்திருக்கலாம். இப்போ வரும் படங்கள் எல்லாம் தீ மாதிரி இருக்கும் கேமராவும், கிராபிக்சும். இது இந்த படத்தில் கொஞ்சம் வீக்.
வில்லன் கொஞ்சம் மிரட்டுகிறார், அவருடை இருக்கும் நான்கு பெண்கள் பயங்கரமான சண்டை காட்சிகள் அவங்களுக்கும் இருக்கும் போல. படத்தின் நாயகி பாலக் கிளாமர் காட்சிகளில் அசத்துகிறார். அவரை சுற்றியும் கதை நகர்கிறது. ரைட்டு எப்படி மீதும் இந்த காங்ஸ்டர் குரூப்புக்கு என்ட்ரி கொடுக்கிறார் என்பதே மீதிக்கதை. ட்ரைலர் நல்லா இருக்கு.
Video: