ரஜினிக்கு இந்த படத்துல ரெண்டு ஹீரோயின்னு.. தலைவர் 171 வேற ரகம்.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
எல்லாரும் இந்த மாதம் லியோ அப்டேட் தான் வரும் என்று நினைச்சுட்டு இருந்தாங்க. ஆனால் பாருங்க யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தலைவர் 170 அப்டேட் நேத்துல இருந்து வந்துட்டே இருக்கு. ஏன் என்று தெரியவில்லை ஆடியோ லான்ச் கேன்சல் பண்ணாங்க, சென்சார் தள்ளி போகுது, படம் ரிலீசுக்கு முன்னர் எல்லாமே நெகட்டிவாவே இருக்கு.
படமும் பெருசா பேசவில்லை என்றால் அவ்ளோ தான், விஜய் ரசிகர்கள் எவ்வளவு ஹைப்பில் இருந்தார்களோ அது எல்லாம் அப்படியே தவிடுபொடி ஆகிவிடும் போல. ஜெய் பீம் படத்துக்கு பின் இயக்குனர் ஞானவேல் என்ன படம் பண்ணுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம் ஆனால் எதிர்பாராத விதமாக ரஜினியை இயக்கவுள்ளார். பெரிய விஷயம்.
அவர் படம் என்றால் கண்டிப்பா அதில் அரசியல் இருக்கும். இவ்வளவு நாள் ரஜினி அரசியல் படத்தை தவிர்த்ததற்கு காரணம் அவர் அரசியல் வந்தால் பாதிப்பு ஏற்படும் என்று. ஆனால் அவர் தான் வரவில்லையே, இனி தைரியமா நடிக்கலாம் என்று முடிவு செஞ்சு விட்டார் போல. டக்குனு இந்த இயக்குனரை புக் செஞ்சு விட்டாரு.
இப்போ அந்த படத்தின் cast எல்லாம் அறிவிப்பு ஒவொன்றாக வந்துட்டு இருக்கு.. நேற்று வந்தது பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கவில்லை. ஆனால் இன்று வந்த இரண்டு அறிவிப்பும் அடி தூள். அவங்களோட நடிப்புத்திறன் மூலம் மக்களை ஈர்த்த ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். முரட்டு அப்டேட். இந்த மாதம் ஷூட்டிங் ஆரம்பம் ஆகிறது.
The girls in #Thalaivar170Squad #DusharaVijayan & #RitikaSingh#Rajinikanth @tjgnan @LycaProductions pic.twitter.com/UBM8sInECg
— Sreedhar Pillai (@sri50) October 2, 2023