என்னடா புதுசா கிளப்பி விடறீங்க.. நடந்தா இந்தியாவின் பெரிய படமா இருக்கும். தளபதி 67 லேட்டஸ்ட் அப்டேட்.
தமிழ் சினிமா அடுத்த வருடம் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒரு படம் இருக்குது என்றால் அது தளபதி 67 தான். அந்த படத்தின் அப்டேட் இன்னும் கொஞ்ச நாளில் வந்துவிடும், இந்த வாரத்தில் வர்றதுக்கு கூட அதிக வாய்ப்பு இருக்கிறது. எப்போடா ரிலீஸ் பண்ணுவாங்க என்று வெறித்தனமா காத்திருக்கின்றனர் ரசிகர்கள். விஜய்க்கு இந்த படம் ஒரு மைல்கல்லா இருக்கும்.
தற்போது நமக்கு கிடைத்த தகவல்படி இந்த படத்தில் ஒரு extended காமியோவில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டும் நடந்தால் திரையரங்கு திரை தீ பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சும்மா வந்த rolex கதாபாத்திரத்துக்கே அவ்வளவு வரவேற்பு என்றால், விஜய் கமல் திரையில் தோன்றும்போது எப்படி இருக்குமோ.
இன்னும் இந்த படத்தின் அப்டேட் அதிகாரபூர்வமாக மட்டும் தான் வரவில்லை ஆனால் இணையதளத்தில் சில விஷயங்கள் லீக் ஆகிட்டே இருக்கு. சமீபத்தில் வெளிவந்த விஷயம் பிக் பாசில் பங்குபெற்ற ஜனனி இந்த படத்தில் முக்கிய ரோல் செய்கிறார் என்று, அதை அவர் indirectஆக சமீபத்தில் நடந்த பிக் பாஸ் பைனலில் கமலிடம் சொன்னார். அவருக்கு தெரியாம இருக்குமா.
அதுபோக சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில் நடிகர் பகாத் 67 படகில் நடிக்கிறீங்களா என்று கேட்டபொழுது அவர் சொன்னதும் அது தான். இந்த படம் கண்டிப்பா LCUக்குள் இருக்குமானால் கண்டிப்பாக நானும் அந்த படகில் இருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். இது ஒரு ஸ்டாண்ட்அலோன் படமா இல்லை LCU என்று தான் இதுவரை தெரியவில்லை.