தளபதி 67 இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. அப்போ தளபதி 68? Recent சென்சேஷன் ஆச்சே இவரு. செம்ம ப்ரெஷ் கூட்டணி.
![Thalapathy 68 update viral](/images/2022/12/11/thalapathy-68-update-1-.jpg)
தளபதி விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்து நடிக்கும் படம் தளபதி 67, இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். மாஸ்டர் படம் பண்ணும்போது அந்த படத்தின் பூஜை டிசம்பர் 5ம் தேதி போடப்பட்டது. அதனால் சென்டிமெண்டாக இந்த படத்தின் பூஜையும் அன்றே போடப்பட்டது அதாவது கடந்த திங்கட்கிழமை (5/12/2022). இந்த படத்தின் அப்டேட் இன்னும் வர ஆரம்பிக்கல அதற்குள் அடுத்த படத்தோட buzz ஆரம்பிச்சுடுச்சு.
விமர்சகர் பிரஷாந்த் கொஞ்ச நாட்களுக்கு முன் ட்வீட் செய்யும்போது ஒரு விஷயம் சொன்னார். 68, 69, 70 ஆகிய மூன்று படங்களையும் இளம் இயக்குனர்கள் தான் இயக்குகின்றனர் என்று. அதேபோல் அப்படி தான் இருக்கும் போல. இப்போது 68வது படத்தின் அப்டேட் என்னவென்றால், லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் இயக்குவதாக இருக்கிறது. இவர் விஜயை சந்தித்து கதை சொன்னதை மீடியா முன்பு ஒத்துக்கொண்டார், அந்த வீடியோ வைரல் ஆனது.
![Thalapathy 68 update viral](/images/2022/12/11/thalapathy-68-update-2-.jpg)
இவர் மீண்டும் AGSக்காக ஒரு படம் பண்ணுகிறார், அந்த படம் தான் தளபதி 68ஆக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. விஜய் கிட்ட இருக்கும் நல்ல விஷயம் இது தான், ஒரு நல்ல படத்தை கொடுத்துவிட்டால் அந்த இயக்குனருடன் பேசி அவருக்கு எதாவது கதை வைத்திருக்கிறாரா என்று கேட்டு தெரிந்து கொள்வார். பின்னர் கதை பிடித்திருந்தால் உடனே படம் ஆரம்பம் ஆகிவிடுகிறது. இந்த ஜெனெரேஷன் இயக்குனர்களை நம்புவது பாராட்ட வேண்டிய விஷயம். ட்ரெண்டிங்கில் இருக்காரு.
வாரிசு படத்தை முடித்தவுடன் தான் இந்த 67 படத்தின் அப்டேட் வரும். அடுத்த வாரத்தில் இருந்து மிகப்பெரிய ப்ரோமோஷன், ஆடியோ லான்ச் எல்லாம் பிளான் செஞ்சிருக்காங்க போல. இன்னும் டீசர், ட்ரைலர் வெளியீடு எல்லாம் இருக்கு. இந்த வாரம் முதல் அடுத்த மதம் 20ம் தேதி வரை விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ஜனவரில இரண்டு மகிழ்ச்சி காத்துக்கிடக்கிறது.