`தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி வாழ்க'.. அவருக்கு பிரச்னை கொடுக்கிறதே பொழப்பா வெச்சுருக்கானுக. வைரல் வீடியோ.
தளபதி விஜய்க்கு அப்போப்போ பிரச்னை டிசைன் டிசைனா அவரோட ரசிகர்கள் மூலம் தான் வருகிறது என்பது மறுக்கப்படாத உண்மை. ஆன்லைன் ரசிகர்கள் வேறு, ஆஃப்லைன் ரசிகர்கள் வேறு. இந்த ஆன்லைன் ரசிகர்கள் பிரச்னை இல்லை அவர்கள் படம் வரும்போது கொண்டாடுங்க, தினமும் விஜயின் பட வீடியோ, எடிட்ஸ் எல்லாம் ரிலீஸ் செய்து சக ரசிகர்களை குஷி படுத்துவங்க, படம் வரும்போது டிக்கெட் புக் பனி நண்பர்களோட என்ஜாய் பண்ணுவாங்க அவ்வளவு தான்.
ஆனால் ஆஃப்லைனில் அதுவும் விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ளரசிகர்கள் கொஞ்சம் danger. விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதி தான். அவர் வந்தாலும் இன்றைய காலகட்ட அரசியலுக்கு செட் ஆகுமா என்றால் கண்டிப்பாக ஆகும். அவருக்கு மிகவும் இளம் வயது. ஒரு இரண்டு மூன்று தேர்தல் சந்தித்தால் நான்காவது தேர்தலின் அவர் முதல்வர் ஆக கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதை இப்பொழுது இருந்தே மிகவும் ஆக்டிவாக செய்ய வேண்டும்.
விஜய் தற்போது அவரோட சினிமா வாழ்க்கையில் பட்ட கஷ்டம் அவமானத்திற்கு அவர் தான் இப்போதைய உச்ச நட்சத்திரம். பான் இந்தியா படம் பண்ணாமலே அவர் நார்த் சைடு எல்லாம் ஒரு அளவுக்கு ரீச் ஆயிட்டார். ஒருப்ரொபேர் பான் இந்தியா படம் அவரை வேற லெவல் உச்சத்தில் கொண்டு போய் உக்காரவைப்பது மட்டும் அல்லாமல் தமிழ் சினிமாவையும் சேர்த்து எடுத்துச்செல்லும். நங்கள் நினைப்பது என்னவென்றால் வரும் 2025ம் ஆண்டு தேர்தலில்மக்கள் இயக்கம் சார்பாக நிறைய இடத்தில் போட்டி போடலாம். அதைப்பொறுத்து தான் அவரின் அரசியல் நிலைப்பாடு உறுதி செய்யப்படும்.\
இப்போது இருக்கும் நிலையில் சென்ற இடமெல்லாம் இவ்வாறு கூச்சலிட்டு வந்தால் அது அவருக்கு தான் பிரச்சனையாய் அமையும். இப்போது தான் அவரது படங்கள் கொஞ்சம் பிரச்னை இல்லாமல் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Video:
`தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி வாழ்க'- ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து கோஷமிட்ட விஜய் ரசிகர்கள்#Vijay | #TamilNaduCM | #BussyAnand | @bussyAnandOff | @actorvijay pic.twitter.com/q6tgzJIGyK
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 16, 2022