பொங்கலுக்கு வரேன் டா.. ரெடியா இருன்னு யாரையோ பாத்து சொல்ற மாறி இருக்கு. விஜய் பேன்ஸ் மீட். முழு விவரம்.
விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் நடிகர் விஜய்; அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை, சென்னை புறநகர் பனையூர் அலுவலகத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்ள உள்ளார் என்ற செய்தி நேற்று காலை வந்ததில் இருந்தே இணையதளத்தை அவங்க கண்ட்ரோலில் எடுத்துகிட்டாங்க விஜய் ரசிகர்கள்.
நேற்று மீட்டிங்கின் போது விஜய் அவர்களின் கட்சி நிர்வாகிகளுக்கு சொன்னது என்ன என்பதை பார்ப்போம்:
விஜய் மக்கள் இயக்கத்தில் அதிகளவில் இலைகனர்களை சேர்க்க வேண்டும்.
ஏழை எளிய மக்கள் மற்றும் தேவையுள்ள பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் முடிந்த அளவு உதவிகள் செய்ய வேண்டும்.
அதிக அளவில் ரத்த தான முகாம்களை நடத்த வேண்டும், அதன் மூலம் இயக்கத்தை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியும்.
இயக்கத்தினர் தங்களுக்குள் கருத்து வேறுபாடின்றி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது போன்ற செயகளில் ஒருபோதும் ஈடுபட கூடாது.
கட் அவுட் வைக்கும்போது அதில் இடம்பெறும் வாசகங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
நேற்று ட்ரெண்ட் ஆன புகைப்படங்களை எல்லாம் பார்த்துவிட்டு தளபதி விஜய் அவரை வாழ்கையில் ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமா அல்லது ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள மாட்டோமா என்று ஆசை படுவதுண்டு . அதே போல் எனக்கும் ஆசை இல்லை லட்சியம் உள்ளது. ஒரு சாதாரண ரசிகன் என் ஆசை நிறைவேறுமா..? என்று பல ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சரி இப்போ வாரிசு படத்துக்கு வருவோம். படத்தின் சில பேட்ச் ஒர்க்ஸ் இன்னும் போயிட்டு தான் இருக்கு போல, இன்னும் படம் முழுசா முடியல. இந்த செய்தி வந்ததில் இருந்து விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி. படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா என்று. காரணம் இது வந்து அவர்களுக்கு ஒரு பிரெஸ்டிஜ் issue மாதிரி, ரிலீஸ் ஆகாமல் போனால். காரணம் அஜித்தின் துணிவு படம் வேற வருது.