சைலெண்டா ப்ரியா ஆனந்த் செய்த சம்பவம். சொல்லாமல் சொல்லிட்டாங்க. லேட்டஸ்ட் அப்டேட் வைரல்.
தளபதி விஜய் நடித்து வெளியாகவிருக்கும் வாரிசு படத்தை விட, அவரின் அடுத்த படமான தளபதி 67க்கு தான் மரண வைட்டிங் ரசிகர்கள் எல்லாம். மேலும் கடந்த திங்கட்கிழமை இந்த படத்தின் பூஜை போடப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. அதுவும் AVM ஸ்டுடியோவில் தான் போடப்பட்டது. யாருமே மொபைல் போனுடன் இருந்தவர்கள் அனுமதிக்க படவில்லை என்று சொல்லப்படுகிறது. தற்போது விஜய் ரசிகர்கள் ஒரு புலனாய்வு செஞ்சு ஒரு விஷயத்தை கண்டுபுடிச்சிருக்காங்க.
அதாவது தளபதி 67 படத்தில் இரண்டு கதாநாயகிகள் ஒருவர் திரிஷா இது முன்னரே உறுதி செய்யப்பட்டது. மீண்டும் தளபதி விஜயுடன் 14 வருடம் கழித்து நடிப்பதால் ரசிகர்கள் செம்ம குஷி ஆகியிருக்காங்க. இன்னொரு கதாநாயகி பிரியா ஆனந்த் என்று சொல்லப்படுகிறது. தளபதி 67 பூஜையின் போது படத்தில் நடிக்கவிருக்கும் முக்கியமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர் என்று சொல்லப்படுகிறது.
அது ஒருபுறம் இருக்க தளபதி 67 படம் LCUக்குள் வருமா என்று பலர் கேள்வி கேட்டு வருகின்றனர். ஒரு சிலர் இது ஸ்டாண்ட் அலோன் படம் என்று சொல்கின்றனர், இன்னொரு சிலர் இந்த படம் LCUக்குள் தான் வருகிறது என்று சொல்கின்றனர். நிறைய பேர் ட்வீட் செய்தனர் இந்த படத்தை பற்றி. பிரியா ஆனந்த் தளபதி 67 - LCU என்று ஒருவர் போட்ட டீவீட்டை லைக் செய்து அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்னும் எதுவுமே confirm ஆகவில்லை. அவங்க எதார்த்தமா கூட லைக் பண்ணியிருக்கலாம். ஏனென்றால் அவங்களே விஜய் பேன் தான். விஜயை பற்றி செய்தி வந்தால் லைக் செய்வது இது முதல் முறை அல்ல, முன்னாடியே நிறைய செஞ்சிருக்காங்க. இப்போ ரொம்ப ஹாட்டா போயிடு இருக்கும் டாபிக் லைக் செய்ததால் ஒவொருவர் அவங்க கற்பனையை அள்ளி தெளிச்சிட்டு இருக்காங்க. ஷூட்டிங் ஜனவரியில் இருந்து ஆரம்பிக்கிறது என்று மட்டும் எங்களுக்கு தெரியும். இப்போது லுக் டெஸ்ட் போயிட்டு இருக்கு.