என்ஜாய் பண்ணிருக்காரு மனுஷன்.. தளபதி விஜய் கொடுத்த விருந்து.. நயன்தாராவுடன் ஜாலியா படம். ஷாருக்கான் ட்வீட் வைரல்.

Thalapathy vijay srk meet up

அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படம் ஜவான், இவ்வளவு நாளாக படத்தின் ஷூட்டிங் சென்னையில் தான் நடைப்ட்பேறு வந்தது. கிட்டத்தட்ட 30 நாளாக. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக, விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கின்றனர். எப்போது இந்த அப்டேட் வந்ததோ அப்பத்திலிருந்து இந்த படத்தின் hype வானளவு உயர்ந்துவிட்டது. 30 நாள் schedule முடித்து இன்று மீண்டும் மும்பை செல்கிறார் ஷாருக். அவர் சென்னையில் எப்படி என்ஜாய் செய்தாரென்று வர்ணித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் தான் வைரல்.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றதை முன்னிட்டு படத்தின் செட்டுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வந்து பார்வையிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். ரஜினியை தலைவர் என்று mention செய்து ட்வீட் செய்துள்ளார் ஷாருக்.

பின்னர் நயன்தாராவுடன் ஜாலியாக படத்துக்கு சென்றுள்ளார், விஜய் சேதுபதியுடன் நன்றாக பேசியுள்ளார். அதாவது சினிமாவை பற்றி, குடும்பம் அனைவரையும் பற்றி ஒரு நல்ல conversation ஆக அமைந்திருக்கும், அதனால் தான் SRKவே mention செய்கிறார். இந்த புகைப்படங்கள் எல்லாம் அவ்வப்போது ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும். ரசிகர்கள் கொண்டாடிவிடுவர். விஜய் சேதுபதி - SRK கிளாஷ் திரையில் எப்படி இருக்குமோ. வெறித்தனமான வைட்டிங்.

பின்னர் தளபதி விஜயுடனான சந்திப்பு. இருவரும் ஜாலியாக டைம் ஸ்பென்ட் பண்ணியுள்ளனர். விஜய் SRKக்கு செம்மையாக உணவு எல்லாம் செஞ்சு கொடுத்திருக்காரு போல. ஒரு பழமொழி சொல்வாங்க “மக்கள் அவங்க வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் சந்தித்ததை கூட மறந்துவிடுவாங்க, ஆனா ஒருத்தர் போட்ட சுவையான உணவை மறக்கவேமாட்டாங்க” என்று. 10 வருடங்கள் கடந்தும் இவர்கள் நட்பு தொடர்வது மகிழ்ச்சி.

பின்னர் அட்லீ-ப்ரியாக்கும் அவரோட நன்றியை தெரிவித்துள்ளார்.

Tweet:

Related Posts

View all