இந்த ஹாலிவுட் படத்தின் கதையை வாங்கிருக்காரு லோகேஷ். பெரிய சம்பவம் லோடிங். முழு விவரம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 67வது படத்தின் அப்டேட் இன்னும் சில தினங்களில் அதிகாரபூர்வமாக வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கு. வாரிசு படத்தின் பேட்ச் ஒர்க்ஸ் டிசம்பர் 2ம் தேதிக்குள் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. டிசம்பர் மாதம் தான் மாஸ்டர் படமும் ஆரம்பித்து பெரிய ஹிட் ஆனது. அதேபோல இந்த படத்தையும் டிசம்பர் மாதமே ஆரம்பிக்கவேண்டும் என்ற செண்டிமெண்ட் தொடரும் என்று சொல்லப்படுகிறது.
நமக்கு கிடைத்த தகவல்படி இந்த படம் தான் விஜய்க்கு proper பான் இந்தியா படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது, அதுமட்டுமில்லாமல் மற்ற மொழி பெரிய நடிகர்களையும் லோகேஷ் கேஸ்ட் செய்ய பேசிவருவதாக சொல்லப்படுகிறது. முக்கியமான கதாபாத்திரங்களில் சஞ்சய் தத், பிரிதிவிராஜ் தெலுங்கு முன்னணி நடிகர் ஆகியோர் இணைவர் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு பின் லோகேஷ், விஜய் இருவரின் range இந்திய முழுவதும் செல்லும்.
தற்போது ஒரு முக்கியமான அப்டேட் என்னவென்றால், லோகேஷ் 2005ம் ஆண்டு வெளியான #AHistoryOfViolence என்ற ஹாலிவுட் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அதிகாரபூர்வமாக வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் லோகேஷ் எழுதிய கதையை அந்த திரைக்கதை கொஞ்சம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருப்பார் போல. அதனால் அதிகாரபூர்வமாகவே வாங்கிவிட்டார், எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காக.
தளபதி 67 படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் கேட்கும் updateஸ் நம்மை வியக்க வைக்கிறது. மேலும் இன்னொரு தகவல் என்னவென்றால் இந்த படமும் LCU-க்குள் தான் வரும் என்று சொல்லப்படுகிறது. அந்த கேரக்டர் தான் இப்போது வரை பில்ட் பண்ணிட்டு இருந்திருக்காரு.