தளபதி 67 படம் LCUவாம். லோகேஷ் சம்பவம். surprise போட்டு உடைச்சுட்டாரு பிரபல நடிகர். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Thalapathy67 update latest video viral

விஜய் நடிக்கும் வாரிசு படத்தை விட அடுத்து லோகேஷ் இயக்கும் தளபதி 67 படத்துக்கு தான் எதிர்பார்ப்பு வேற லெவெலில் இருக்கிறது. வாரிசு என்று தலைப்பு வைத்ததும் இது ஒரு முழு நீல குடும்ப படம் என்று தான் எல்லா இடத்திலும் மார்க்கெட்டிங் செய்து வருகிறது, ஆனால் இந்த படத்தில் எவ்வளவு surprise ரசிகர்களுக்கு வம்சி வைத்திருப்பார் என்று தெரியவில்லை. ஆனால் hype மிகவும் கம்மியாக இருப்பது இந்த படத்துக்கு நல்லது. ஒரு வேலை படம் ரொம்ப நன்றாக இருந்து விட்டால் அடுத்தடுத்த வாரங்களில் சூப்பரா பிக் அப் ஆய்டும்.

தற்போது நாம் பேசியிருப்பது தளபதி 6 படத்தை பற்றி. எப்போது லோகேஷ் தான் விஜயின் அடுத்த படத்தின் இயக்குனர் என்ற செய்தி கசிந்ததோ, அன்று முதல் இந்த படத்தை பற்றி பலர் பலவிதமாக பேசி வருகின்றனர். கரணம் விக்ரம் படத்தின் மெகா வெற்றி. இதுவரை தமிழ் சினிமாவில் யூனிவெர்ஸ் என்று யாரும் உருவாக்கியது இல்லை, ஆனால் அதை லோகேஷ் செய்துள்ளார். அவர் பேட்டியில் சொல்லும்போதே எல்லா பெரிய ஹீரோவையும் ஒரு படத்தில் மீட் பண்ண வைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று கூறினார்.

Thalapathy67 update latest video viral

அதனால் கமல், சூர்யா, கார்த்தி எப்படியும் அடுத்த படத்தில் மீட் செய்வாங்க. அந்த படத்தில் விஜய் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். கண்டிப்பாக பாக்ஸ் ஆபிசில் 1000 கோடி வசூல் செய்த முதல் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது அவ்வளவு பெரிய வசூல் ஒரு படம் பண்ணவேண்டும் என்றால் இவ்வளவு ஸ்டார்க்கேஸ்ட் மிகவும் அவசியம். இதை சாத்தியப்படுத்திவிட்டால் தமிழ் சினிமா இந்திய சினிமாவுக்கே முன்னோடி ஆகிவிடும், நிறைய படங்கள் ஹாலிவுட் போல வர்ற வாய்ப்பிருக்கிறது.

சமீபத்தில் கைதி, விக்ரம் படத்தில் நடித்த நரேன் கொடுத்த பேட்டியில், “இந்த படத்தில் நான் நடிக்கவில்லை, நான் கைதி 2வில் இருக்கிறேன். ஆனால் இந்த படமும் அந்த யூனிவெர்ஸ்குள் தான் வரும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார், அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல்.”

அதுபோக மற்றொரு ரசிகர் செய்த எடிட்டயும் இந்த வீடியோவோடு இணைத்துள்ளோம்.

Video:

Related Posts

View all