தண்டட்டிய காதுல மாட்டாம.. அடில.. அடேய் இது நல்லா இருக்கு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
மண் வளம் மாறா படங்களுக்கு எப்போவுமே வரவேற்பு இருக்கும் மக்களிடத்தில். இந்த மாதிரி படங்களுக்கு இப்போதும் மக்கள் கொடுக்கும் வரவேற்பு காரணமாக தான் இதுபோன்ற நல்ல காமெடியான கதைகளை சொல்ல இயக்குனர்கள் தயங்குவதில்லை. பெரிய பிரமாண்ட படம் கூட எடுத்திடலாம், ஆனால் இந்த மாதிரி படம் எடுப்பது கடினம்.
ரோகினி, பசுபதி, விவேக் பிரசன்ன தான் முக்கிய ரோல் பண்றாங்க. அதிலும் ரோகினி வயதான கிழவி கதாபாத்திரம். இவங்க இறந்து போயிடறாங்க, காதில் இருக்கும் கம்மல் யாருக்கு என்பதில் இருக்கிறது சுவாரசியம். அதை நகைச்சுவையாக இயக்குனர் சொல்லிருப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இந்த மாதிரி படங்கள் வேண்டும் தமிழ் சினிமாவுக்கு.
படத்தில் நிறைய வயதான படிகள் தாத்தாக்கள் நடிச்சிருப்பாங்க போல, அப்படியே கிராமத்து வாடை. அவங்களை எல்லாம் சரியாக நடிக்கவைப்பது தான் கடினம். ஆனால் அதில் இயக்குனர் வெற்றி கண்டிருக்கார் என்று தான் சொல்ல வேண்டும். எல்லாருமே ரொம்ப அருமையா பண்ணிருக்காங்க. படமும் இப்படி இருந்தால் ஹிட்டு தான்.
கிராமத்தின் மண்மனம் மாறாமல் புதிய மாறுபட்ட கதைக்களத்தில் பாட்டிகளின் லூட்டியோடு ஒரு சிறந்த படமாக வரும் #தண்டட்டி திரைவரலாற்றில் முக்கியப்படமாக இருக்கும் வாழ்த்துக்கள் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் பணிபுரிந்த நடித்த அனைவருக்கும். ராம் சாங்கையா மணிநகரத்தின் இயக்குனர் என்று அவங்க ஊர் மக்கள் வெற்றியடைய வலது தெரிவித்திருக்கின்றனர்.
வீடியோ: