பா.ரஞ்சித்தின் முரட்டு சம்பவம் லோடிங். சீயான் விக்ரம் வேற மாதிரி லுக்கு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Thangalaan video viral chiyaan61

இயக்குனர் பா.ரஞ்சித் தான் சீயான் விக்ரமின் அடுத்த படம் பண்ணுகிறார் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து அந்த படத்துக்கு வேற மாதிரியான எதிர்பார்ப்பு. அதுவும் முழு படமும் KGF-ல் தான் எடுக்கிறார்கள் என்ற பேச்சு வந்ததிலிருந்து ஒரு மாதிரி hype வேற லெவெலில் இருந்தது. மேலும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் 3டி-யிலும் எடுக்கவுள்ளனர். இது தான் பா.ரஞ்சித்தின் கனவு படம் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இது ஒரு பீரியட் படம்.

இந்த படத்தில் நாயகி என்று எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. முதலில் துஷாரா என்று கூறினர். ஆனால் இப்போது அதிகாரபூர்வ தகவல் கிடைத்துவிட்டது. பார்வதியும், மாளவிகா மோகனனும் தான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த டீசரில் அவர்களின் கிலிம்ப்ஸ் வெச்சது செம்ம surprise. அதுமட்டுமில்லாமல் முக்கிய வேடத்தில் நடிப்பின் அரக்கன் பசுபதியும் நடிக்கிறார். இவர் சர்பட்டா பரம்பரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thangalaan video viral chiyaan61

சீயான் விக்ரம் இந்த படத்திற்காக 20 கிலோ அதுவும் ஒரு மாதத்தில் இழைத்துள்ளராம். அவர் பெயர் போனதே இது தான். அவர் இதுக்கெல்லாம் தயங்கவே மாட்டாரு, சினிமா மேல் அவருக்கு இருக்கும் காதல் அது. அதுமட்டுமில்லாமல் முழு நீல அந்த தாடி கெட்டப் மிரட்டுகிறது.

இந்த படத்தில் இன்னொருவர் ஸ்கோர் செய்திருக்கிறார் என்றால் அது ஜி.வி.பிரகாஷ் தான். பீரியட் படம் என்று வந்துவிட்டால் போதும் சின்ராசை கையில் பிடிக்க முடியாது. BGM சும்மா வேற மாதிரி தெறிக்க விட்டிருக்காரு. இயக்குனர் டச் தெரிகிறது. கடைசியில் ஏதோவொரு மிருகத்தின் தலையை வெட்டுவது போல ஒரு காட்சி, நல்ல வேலை அதை காட்டவில்லை, ரஞ்சித் படம் வேற. குறிப்பிட்ட சமூகம் இந்நேரம் விமர்சனத்தை வைக்க ஆரம்பிச்சிருக்கும்.

கடைசியாக இந்த படத்தின் பெயர் “தங்கலான்”.

Video:

Related Posts

View all