தனி ஒருவன் 2.. ப்பா அறிவிப்புனா இப்படி இருக்கனும்.. தீமை தான் வெல்லும்... லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Thani oruvan 2 video viral

2015ம் ஆண்டு தமிழ் சினிமாக்கு ஒரு பெரிய வரம் என்று சொல்லலாம். இதுவரை வராத அளவுக்கு ஒரு திரைக்கதை, ஹீரோ, வில்லன் face off எல்லாம் அப்படி இருக்கும். அந்த படம் வந்து 8 வருடம் ஆச்சு, இன்னும் அந்த படத்தை பார்த்தால் அந்த சுவை குறையாமல் இருக்கும். கண்டிப்பா இன்னும் 10 வருடங்கள் போனால் கூட அந்த படத்தின் மகிமை குறையாது.

எந்த படத்தை பற்றி பேசுகிறோம் என்று தானே நினைக்கிறீங்க. தனி ஒருவன் படம் தான். ஹீரோ, வில்லன், கதாநாயகி, கூட ட்ராவல் பண்ணும் கதாபாத்திரங்கள் இவங்க எல்லாம் எதுக்கு படகில் இருக்காங்க என்று கேள்வி வராத அளவுக்கு ஒரு தரமான படத்தை இயக்கினார் ஜெயம் மோகன் ராஜா. அவராலே அதுபோன்று இன்னொரு படம் எடுக்க முடியுமா என்றால் கஷ்டம் தான்.

Thani oruvan 2 video viral

ஒரு சில படங்களுக்கு எல்லாம் இரண்டாம் பாகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறோம். அப்படி இந்த படத்துக்கும் இரண்டாம் பாகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இதை எப்படி கனெக்ட் செய்வது என்று சரியா இயக்குனர் யோசிக்கணும் இல்லனா அந்த படம் படுத்துவிடும்.

இப்போது தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அறிவிப்பு தனி ஒருவன் 2ம் பாகம். 2015 இதே நாளில் தான் தனி ஒருவன் படம் ரிலீஸ் ஆனது. அதேபோல் இப்போது ரிலீஸ் ஆன அந்த நல்ல நாளில் இந்த இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை அறிவித்திருக்கிறது படக்குழு. இசை hiphop ஆதி தான் வேண்டும் ஏனென்றால் அவரை replace பண்ணவே முடியாது.

Video:

Related Posts

View all