கல்யாணம் ஆன உடனே புருஷன் சமயலறைக்கு போறான் என்றால்.. ஹாட் ஐஸ்வர்யா ராஜேஷ்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தி கிரேட் இந்தியன் கிட்சன் இந்த படம் மலையாளத்துல வந்ததில் இருந்து யாராவது ஒருத்தர் இந்த படத்தை தமிழில் ரீமேக் பண்ணலாமே என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஏனென்றால் இந்த படம் தமிழ்நாட்டுக்கு டைலர் made படம். சரியான நேரத்தில் இயக்குனர் கண்ணன் இந்த படத்தின் ரைட்ஸ் வாங்கி எடுக்க ஆரம்பித்து தற்போது முடித்துள்ளார். இந்த படத்தில் அந்த பெண் கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் நடித்திருப்பார், இவரின் நடிப்பு போலயே தமிழ்நாட்டில் அவ்வளவு எதார்த்தமாக பண்ணக்கூடிய ஆள் இது போன்ற கதைகளுக்கு இருக்கிறார் என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.
இந்த படம் திருமணம் ஆகி புகுந்த வீடு செல்லும் பெண்ணின் ஒரு கதை. அவர் புகுந்த வீடு ஆண்களால் சில சமயங்களில் எப்படி ட்ரீட் செய்ய படுகிறாள் என்று, அந்த பெண்டிருக்கு முந்தய ஜெனெரேஷன் அதை எப்படி அடாப்ட் செய்து கொண்டனர் என்பது, தீட்டு, பெண்கள் அது செய்ய வேண்டும், இது செய்ய கூடாது போல பல விஷயங்களை பேசுகிறது இந்த படம். படத்தின் ட்ரைலர் பார்த்தாலே தெரியுது, சரியாக ரீமேக் செய்திருக்கிறார்கள் என்று.
எப்போதுமே திருமணம் ஆகி வரும் பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும், என்ன திறமைகளும் இருந்தாலும் அடுப்பறையில் தான் பலரது வாழ்க்கை முடிந்தது. இது கொஞ்சமாக தளபதி நடிச்ச பிகில் படத்தில் கூட அட்ரஸ் செய்திருந்தனர். எந்தவொரு கதாபாத்திரத்திற்காக குறிப்பிட்ட சமூகத்தை இழிவு செய்துவிட்டதாக பலர் குற்றம் சுமத்தினர். ஆனால் நடைமுறையில் அது நடப்பது தான். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் சில பெண்கள் கூட அதை ஏற்றுக்கொள்கின்றனர். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த ரோல் பண்ணுவதால் இந்த கதாபாத்திரத்தின் மேல் முழு நம்பிக்கை இருக்கிறது. நடிப்பால் நம்மை கிறங்கடிக்கப்போகிறார். இந்த படம் மட்டும் முதலில் வந்திருந்தாள் கண்டிப்பாக இவருக்கு விருது கிடைத்திருக்கும்.
Video: