ராட்சசன் இரண்டாம் பாகம் மாதிரியே இருக்கு வெறித்தனமா.. வெற்றி வேற லெவல். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழில் வெளிவந்த ராட்சசன் படத்தின் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு, அதுவும் அந்த பின்னணி இசை படம் முடிந்த பின்பும் நமக்கு கேட்டுக்கொண்டே இருக்கும். சிவப்பு ரோஜாக்கள் படம் கமல்ஹாசன் நடிப்புக்கு எப்படி இன்னுமோரு அங்கிகாரமாக அமைந்ததோ அதுபோல் தமிழ் சினிமாக்கும் குழந்தை பாதுகாப்புக்கும் இப்போது இதுபோல் சினிமா அவசியம்தான். பார்வையாளர்களை (பெற்றோர்களை) சற்று நடுங்கதான் செய்தது இந்த படம்.
சும்மா கமர்சியல் படங்கள்ல மட்டும் நடிக்காம விஜய் அஜித் இந்த ராட்சசன் குற்றம்23 தடம் இது போன்ற க்ரைம் திர்ல்லர் படங்களில் நடிச்சா நல்லா இருக்கும். எல்லாமே இது போல இருக்கணும் சொல்ல வரலை நாலு படங்கள்ல ஒரு படம் இது மாதிரி இருந்தா செமையா இருக்கும் என்பது விஜய், அஜித் ரசிகர்களின் கருத்தாக இருந்தது அப்போது. அதை நடிகர் வெற்றி சரியாக செய்து வருகிறார்.
நடிகர் ஸ்ரீகாந்துக்கு இந்த படம் நல்லவொரு comeback-ஆக இருக்கும் என்று நம்புகிறோம். நிறைய படங்கள் நடிச்சுட்டு வந்தார் ஆனால் பெரியளவு சொல்லிக்கிற அளவு இல்லை. பெருசா அவர் சமீபத்தில் நடிச்சு வெளிவந்த படங்கள் எதுவும் போகல. இந்த படம் பார்க்க ரொம்ப ப்ரோமிஸிங்கா இருக்கு. பெண்களை கடத்தி கொடூர வில்லனாக பண்ணிருப்பார் போல வெற்றி. அதை கண்டுபிடிக்கும் அதிகாரியாக ஸ்ரீகாந்த். போலீஸ் கெட்டப்பில் சூப்பரா இருக்காரு.
இந்த படத்தில் நிறைய கதாநாயககிகள் நடிச்சிருக்காங்க, எல்லாருமே வந்தோம் போனோம் என்று இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ அதை செஞ்சுட்டு போயிருக்காங்க. ஸ்ரீகாந்த் pair சூப்பரா இருக்காங்க, வெற்றி கூட மாறன் படத்தில் தனுஷ் தங்கச்சியா நடிச்ச ஸ்ம்ருதி நடிச்சிருக்காங்க. இந்த படத்தில் முதலில் வெற்றி நல்லவனா கெட்டவனா என்று கூட கெஸ் செய்ய முடியாத அளவுக்கு இருக்கு ட்ரைலர்.
Video: