மிடில் கிளாஸ் பசங்களோட அந்த ஒன் சைடு காதல் வலி. அப்படியே திரையில்.. தேன்மொழி வீடியோ வைரல்.
இந்த பாடல் வெளிவந்த போது இந்து பாடலுக்கு அடிமையாணென் இன்று வரை மீள முடியவில்லை தினமும் கேட்கிறேன் என்பதே பலரின் கருத்து. தனுஷ், அனிருத் சேர்ந்தாலே வேற ராகம் தான், அது இன்றும் என்றும் மாறாத ஒரு கருத்து. முதல் முறையாக எப்பொழுது இந்த பாடலை கேட்க ஆரம்பித்தார்களோ அந்த இசையில் சரணடைந்து விட்டனர் இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.
பயணம் + ஜன்னல் இருக்கை + லேசான மழை நாள் + இயர்போன்கள் + கண்கள் மூடியவை + சில கண்ணீர் = எப்போதும் சிறந்த உணர்வு. இந்த பாடல் நமக்கு அதே உணவை தான் கொடுக்கிறது எப்பொழுது கேட்டாலும். நாட்கள் கடந்துவிட்டன ஆனால் இந்த பாடல் இன்னும் என் இதயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
உன்ன நெனச்சோண்ணும் உருகள போடி🥺.. சோகத்தில் நா ஒன்னும் வழக்கல தாடி🥴.. கெத்தா கட்டிட்டு அழுவுறனே😢. அழுது முடுச்சிட்டு சிரிக்கிறனே😁..
“நெஜமா நான் செஞ்ச பாவம் முழுசா உன் மேல வெதச்ச பாசம்..” எவ்வளவு உண்மையான வரிகள் இது. மீட்டில் கிளாஸ் பசங்களோட அந்த காதல் வலி அப்படியே இந்த பாடலில்.
உரிமையா பேசி பழகிட்டிருந்த இடத்தில் இன்னைக்கு யாரோ மாதிரி இருக்கிறது ரொம்ப கொடுமை!! அனுபவித்தவர்களுக்கு அதன் வலி புரியும். இந்த வலியை எதாவது ஒரு தருணத்தில் கண்டிப்பாக நாம் பார்த்திருப்போம். அது அப்படியே கண்முன்னாடி பார்ப்பது போல் ஒரு உணர்வு ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்.
Video: