தனுஷ் அழவும் வெச்சுட்டாரு, சிரிக்கவும் வெச்சுட்டாரு.. ஷோபனா மாதிரி ஒரு பொண்ணு வேணும். திருச்சிற்றம்பலம் review.
ரிவியூ எழுதும் நான் ரொம்ப நாளா இந்த மாதிரி ஒரு படத்தை தான் தமிழ் சினிமா மிஸ் பண்ணிருச்சுன்னு ரொம்ப ஆணித்தரமா சொல்வேன்.
சும்மா ஆக்சன் படம், சூப்பர் ஹீரோ படம் எல்லாம் என்ஜோய் பண்ணலாம். ஆனால் இந்த மாதிரி படங்கள் தான் நம்மை உணர வைக்கும். ஏனென்றால் அந்த படத்தில் தனுஷ் ஏற்ற கதாபாத்திரம் நம்ம தான். நம்ம வீட்ல அப்படி தான் நிறைய பெரு இருப்போம்.
அன்பு, வலி, மகிழ்ச்சி இதெல்லாம் குடுப்பதோட சேர்ந்து அனுபவிக்கும் பொது கிடைக்கும் ஒரு உணர்வே வேற.
சரி படத்துக்கு வருவோம்.
எனக்கு தெரிஞ்சு தமிழ் சினிமாவில் நீண்ட நாள் கழிச்சு ஒரு பீல் குட் மூவி பார்த்த மகிழ்ச்சி இன்னும் எனக்குள் இருக்கிறது. இந்த மாதிரி கதாபாத்திரங்களுக்கு தனுஷை தவிர வேறு யாராலும் சரியாக பண்ண முடியாது. அடுத்து படத்தோட மிகப்பெரிய ப்ளஸ் நித்யா மேனன்.
இப்போ இருக்கும் யூத், 90ஸ் கிட்ஸ் எல்லாருக்கும் இந்த படத்தில் வரும் ஷோபனா மாதிரி ஒரு பிரண்ட் இல்லையேங்கிற ஏக்கம் கண்டிப்பாக இருக்கும்.
ரொம்ப க்யூட் ஷட்டில் ஆன performance பிரியா கிட்ட இருந்தும், ராசி கண்ணா கிட்ட இருந்தும்.
படத்தோட இன்னொரு மிகப்பெரிய ப்ளஸ் பாரதிராஜாவும், பிரகாஷ் ராஜும். அவங்க எல்லாம் லெஜெண்ட்ஸ். இந்த மாதிரி கதாபாத்திரம் எல்லாம் கேக் வாக் அவங்களுக்கு. பின்னி பெடல்.
அனிருத், தனுஷ் சேர்ந்தாலே அது ஒரு வைப் தான். அடுத்த படம் சீக்கிரம் பண்ணுங்க பா. திரும்பியும் இவ்ளோ பெரிய கேப் விட்ராதிங்க. இயக்குனர் மித்ரன் ஜவகர் ஜெயிச்சுட்டீங்க.
படம் பாருங்க கண்டிப்பா disappoint ஆக மாட்டீங்க.
Rating: 3.75/5