துணிவு படம் தூக்கலா இருக்கு.. ஒன்னு மட்டும் மிஸ்ஸிங். திரை விமர்சனம் இதோ. முழு விவரம்.
தல அஜித் நடித்த துணிவு படம் விமர்சனம் தான் இப்போ பார்க்க போகிறோம். அஜித்தை பொறுத்தவரை க்ரெ ஷேடில் நடித்தார் என்றால் படம் வேற லெவெலில் இருக்கும் போல. அவரின் தாடிக்கும் தோற்றத்திற்கும் அந்த வில்லனிசம் சரியா செட் ஆவுது. மிரட்டல் ஒரு மல்டி ஹீரோ சப்ஜெக்ட் விஜய் அஜித்தை வைத்து பண்ணலாம். இந்திய சினிமாவின் பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கும்.
இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கு, ஆனாலும் ஒவ்வொன்னையும் சரியாக செதுக்கிருக்காரு வினோத். வினோத் அவருடைய இன்டெர்வியூவில் சொன்னது போல தான் திரைக்கதை. முதல் பாதி ரசிகர்களுக்கு, பின்னர் இரண்டாம் பத்தி ககுடும்பங்களுக்கு, பெண்களுக்கு. பேங்க் hijack ஒருவன் செய்கிறான் என்றால் அதற்கு ஒரு ஸ்ட்ராங்கான காரணம் தேவை.
அந்த காரணம் சரியாக இருந்தால் படம் உண்மையா வெற்றி பெற்று விடும். இரண்டாம் பத்தியில் படம் பார்க்க வருகிறவர்களுக்கு ஒரு லேர்னிங் என்று சொல்லலாம். கிரெடிட் கார்டு எல்லாம் வைத்திருந்தால் பேங்க் நம்மிடம் எப்படி கொள்ளை அடிக்கின்றனர் என்பதை எல்லாம் ரொம்ப டீடைலா சொல்லிருக்காங்க. கொஞ்சம் அங்கும் இங்கும் லாக் இருக்குது ஆனால் ரொம்ப அருமையா இருக்கு படம். மஞ்சு வாரியர் ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க, தர்ஷன் ரொம்ப நல்லா பண்ணிருக்காரு.
முழுக்க முழுக்க அஜித் அஜித் தான். ஒரு சில காட்சிகள் இது கமர்சியல் படம் என்பதால் அந்த லார்ஜ்ர் than லைப் கதாபாத்திரம், சன்டை காட்சிகள் எல்லாம் மறந்துவிடலாம், படம் ஒரு முக்கியமான மெசேஜ் கன்வே பண்ணுது. இன்னொருவரை mention பண்ண மறந்துட்டோம் சமுத்திரக்கனி, ரொம்ப அருமையா பண்ணிருக்காரு. இசை ஜிப்ரான் பின்னி பெடல். ஆகமொத்தத்தில் துணிவு வெற்றி தான்.
ரேட்டிங்: 3.5/5