வாரிசுக்கு பயந்தா? மீண்டும் ஒரு நாள் முன்னாடி போகிறதா துணிவு. லேட்டஸ்ட் அப்டேட். முழு விவரம்.
வாரிசு, துணிவு படத்தை வைத்து ஆள் ஆளுக்கு தினமும் ஒரு கட்டுக்கதை விட்டுட்டு இருக்காங்க. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வாரிசு ட்ரைலர் ரிலீஸ் ஆன போதே துணிவு படத்தின் ரிலீஸ் தேதியும் ஒரு நிறுவனம் அறிவித்தது, அதே நாளில் வாரிசு படகின் ரிலீஸ் தேதியும் நாங்க 11ம் தேதியே நாங்களும் வர்றோம் என்று சொன்னாங்க வாரிசு படக்குழு.
நீ முன்னாடி போனா மட்டும் விட்ருவோமா என்பதுபோல் தான் இருந்தது போன வாரம் எல்லாம். இப்போது நமக்கு கிடைத்த தகவல்படி அதாவது JSK கோபி என்னும் விநியோகஸ்தகர் துணிவு படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் செய்ய நிறைய வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்த டிஸ்கஷன் தான் இப்போ போயிட்டு இருக்காமே.
சமீபத்தில் வந்த இரண்டு டிரைலரும் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. வாரிசு படத்தை விட துணிவு படத்தை நிறைய பேர் பார்த்தனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. ட்ரைலரை சரியான தேதியில் ரிலீஸ் செய்து, கொஞ்சம் யூடியூபில் காசு போட்டு தரமா ப்ரொமோட் பண்ணிட்டு வர்ராங்க துணிவு படக்குழு. கிட்டத்தட்ட 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாஸ் காட்டி வருகிறது.
அதுக்கும் கொஞ்சம் சளைக்காமல் ரிலீஸ் ஆகி ரெண்டு நாள் தான் ஆச்சு 32 மில்லியன்களை கடந்து வாரிசு டிரைலரும் கெத்து காட்டி வருகிறது. தமிழ் சினிமாவிற்கு தேவை இரண்டு இடமும் ஜெயிக்க வேண்டும் என்று. ஜெயித்தால் சூப்பரா இருக்கும். இல்லை ஒரு படம் ஜெயித்து இன்னொரு படம் தோற்றால் ஒரு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பார்ப்போம் என்னெல்லாம் பண்ண போறாங்களோ.
Latest:
#துணிவு திரைப்படத்தை 10ம் தேதி ரீலிஸ் செய்யலாமா என படக்குழு ஆலோசனை.....
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) January 5, 2023