சாதனை படைத்த துணிவு ட்ரைலர்.. 24 மணி நேரத்தில் 30+ மில்லியன்களை அள்ளியது.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Thunivu trailer hits 50 million views

அஜித் நடித்த துணிவு படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகிறது, அதை முன்னிட்டு கடந்த டிசம்பர் 31ம் தேதி துணிவு படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டது. வெளியிட்ட நொடி முதல் அந்த ட்ரைலர் தான் இணையத்தில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1. 24 மணிநேரத்தில் 34 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இதில் ஒரு ஆச்சர்யம் இருக்கு. அது என்னவென்றால்,

துணிவு படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட வலிமை படத்துக்கு தான் எதிர்பார்ப்பு அதிகம், ஆனால் பாருங்க வலிமை படத்தின் ட்ரைலரை அதாவது இதுவரை வலிமை படத்தின் ட்ரைலர் வெறும் 25 மில்லியன் பார்வையாளர்களை தான் கடந்துள்ளது. அந்த சாதனையை துணிவு படம் ஒரே நாளில் முறியடித்துள்ளது. இதற்கு காரணம் அந்த competition தான்.

Thunivu trailer hits 50 million views

ஏனென்றால் இந்த பொங்கல் தான் முடிவு செய்யும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 கதாநாயகன் யாரென்று. ஒரு புறம் விஜய் தான் என்று மல்லுக்கட்டுவர், இன்னொருபக்கம் அஜித் தான் என்று. இருவரும் ஒரு போட்டியில் மோதுகின்றனர். அதில் யார் ஜெயிக்கறாங்களோ அவங்க தான் நம்பர் 1 நடிகர் என்று அறிவிச்சுடலாமே. படத்தின் ரிலீஸ் தேதி தான் இன்னும் எப்போது என்று தெரியவில்லை.

துணிவு படத்தின் ரிலீஸ் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் வாரிசு படத்தின் ரிலீஸ் ஜனவரி 12ம் தேதி என்று overseasல எல்லாம் ப்ரொமோட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் ரிலீசுக்கு 10 தினங்கள் மட்டுமே இருப்பதால் இந்த வாரம் முழுக்க இரண்டு படங்களுக்கும் அப்டேட் மழை பொழியவுள்ளது. பார்ப்போம் யார் இந்த பந்தயத்தில் ஜெயித்து முதன்மை நடிகர் ஆகிறார்கள் என்று.

Video:

Related Posts

View all