துணிவு ட்ரைலர் பாத்தீங்களா.. லைட்டா பீஸ்ட் படத்தின் வாடை அடிக்கல.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
அஜித் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு துணிவு படத்தின் ட்ரைலருடன் செமத்தியா ஆரம்பம் ஆகியிருக்கு. அஜித் ரசிகர்கள் சொல்வது என்னவென்றால், மங்காத்தா மாதிரி இருக்கு செம்ம வைப்ஸ் என்று. ஆனால் எங்களுக்கு இந்த படத்தில் இன்னொரு deadly வில்லனை பார்க்க இருக்கிறோம் என்பது தான். ஆள் பார்ப்பதற்கு செம்ம மாசா இருக்காரு. வெள்ளை தாடி முடில ஒருவர் மாஸ் காட்ட முடியும் என்றால் அஜித்தை தவிர வேறு யாரு.
இந்த படத்தின் கதை ஆரம்பமே பேங்க் ஹெய்ஸ்ட் தான் போல, எப்படி பீஸ்ட் படத்தில் மாலை hijack செஞ்சாங்களோ அதே மாதிரி தான் ஆரம்பிக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் அஜித் பேங்க் புல்லா கொன்றோல் எடுத்துட்டா வெளியில் இவங்க பணத்தை கொள்ளை அடிச்சுட்டு வெளியில் போகும்போது காப்பாத்த தான் அவங்களுடைய இன்னொரு காங் வரும்போல.
ஆனால் அஜித்தை வைத்து பேங்க்காக்ல சில ஷாட்ஸ் எல்லாம் கடைசியில் எடுத்தாங்க அதுவெல்லாம் எதற்கு என்று தெரியவில்லை, அஜித்துடைய டான்ஸ் ஒரு மாதிரி சூப்பரா இருக்கு. ஒரு ஹீரோ வெறித்தனமா வில்லனா நடித்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்றால் அது அஜித் மட்டும் தான். வேறு யாரு நடிச்சாலும் அது அவங்க நடிக்கிறாங்க என்பது அப்பட்டமாக தெரியும், இவருக்குள் அந்த நெகட்டிவ் swag இருக்கு.
என்ன பீஸ்ட் படம் மாதிரி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும், விஜய் ரசிகர்கள் சொல்வது என்னவென்றால் பீஸ்ட் படத்தில் ஒரு வில்லன் இல்லனு தான் கீட்டேங்க இதோ கிடைத்துவிட்டது என்று ட்வீட் செய்கின்றனர். அப்படி கிராஸ்ஓவர் இருந்தாக்கூட மாசா இருக்கும் போல. இனி எல்லார் கண்ணும் வாரிசு ட்ரைலர் மீது தான். அது இனி எப்படி இருக்கப்போகுதோ?
Video: