பிளாப் ஆனாலும் இவங்க ரெண்டு பேர் படம் மட்டும் டாப் 10ல இருக்கு. 2022 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் ட்ரெண்டிங்.

Tn box office report 2022

தமிழ் சினிமா ரசிகர்களுக்கிடையே வருட கடைசி ஆகிவிட்டால் ஒரு சண்டை வரும். அது யார் இந்த வருடம் பாக்ஸ் ஆபிசில் முதலிடம் என்று. அந்த சண்டை mostly விஜய் அஜித் ரசிகர்களிடம் தான் இருந்து தான் ஸ்டார்ட் ஆகும். ஆனால் இந்த வருடம் இரண்டு படமும் பெரிய பிளாப். இதில் எந்த படம் அதிக வசூல்ன்னு இப்போ சண்டை.

நமக்கு இப்போ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் கிடைச்சிருக்கு. முதலிடத்தில் எல்லாரும் எதிர்பார்த்தாது போல பொன்னியின் செல்வன் தான் இந்த வருடத்தின் பெரிய வசூல் செய்த படம், 500 கோடியை தாண்டி தமிழ் சினிமாவின் பெயரை காப்பாற்றியது. ஆனால் இதுக்கெல்லாம் விதைபோட்டது உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம். ஒரு கமர்சியல் படம் நன்றாக இருந்தால் 400 கோடி கூட வசூல் செய்யும் என்று உணர்த்தியது அந்த படம்.

Tn box office report 2022

மூன்றாவது இடத்தில் KGF 2. இந்தியாவின் நம்பர் 1 வசூல் இந்த படம். நான்காவது, ஐந்தாவது இடத்தில பீஸ்ட் மற்றும் வலிமை படங்கள். இரண்டு படமுமே எதிர்பார்த்த அளவுக்கு போகல, ஆனால் டாப் 10 இடத்தில் இருக்கிறது என்றால் முக்கிய காரணம் இவங்க இரண்டு பேருக்கும் இப்போ இருக்கும் மார்க்கெட் தான். career பீக்ல இருக்காங்க, நல்ல படம் பண்ணினால், இந்திய ளவில் பெரிய ஹிட் ஆகும்.

அடுத்த 5 இடங்களில் எதிர்பார்த்தது போலவே டான், RRR, திருச்சிற்றம்பலம், லவ் டுடே, சர்தார் போன்ற படங்கள் இருக்குது. ஆகமொத்தம் கார்த்திக்கு இந்த வருடம் செம்ம வருடம். டாப் 20 என்று எடுத்து பார்த்தல் கண்டிப்பா விருமன் படமும் இருக்கும். மூன்று படங்களில் அவருடைய மாஸ் காட்டிட்டாரு. அடுத்த வருடம் ஆரம்பமே அமர்களமா ஆரம்பிக்க போகுது.

Tweet:

Related Posts

View all